21 March 2014

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்தொழில் திணைக்களத்திடம்

இலங்கை கடற்பரப்பினுள் 19-03-2014 பிற்பகல் 4.30 மணியளவில் அத்து மீறி நுழைந்த 75 இந்திய மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும்  அவர்கள் நேற்றிரவு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை (20-03-2014)  யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்;. 

இந்த மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்திய மீனவர்கள் பயன்படுத்திய 13 படகுகளும் ட்ரோலர் வகையை சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகமொன்று  தெரிவிக்கையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டோரில் 25 பேர் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சியோர் நாகபட்டினம், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் குறிப்பிட்டுள்ளது.
பாக்கு நீரிணையில் உள்ள கச்சதீவு மற்றும் நெடுந்தீவு ஆகியவற்றுக்கு அருகில் இலங்கையால் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் மீன்படியில் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாக்கு நீரிணையில் மீன்பிடித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள தகராறை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இரு  நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உத்தேச பேச்சுவார்த்தைக்கு வழிகோலும் வகையில் இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தைச்  சேர்ந்த 140 மீனவர்களை விடுதலை வடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான மீனவர் ஒருவர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 10 படகுகளிலும், காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 2 படகுகளிலும் , இராமநாதபுர மாவட்டத்தில் இருந்தும் வந்த ஒரு படகும் என 53 பேர் நேற்று காலை 7.00 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டோம். எனினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு திசைகாட்டிகள்  படகில் பொருத்தவில்லை. அதன் காரணத்தினாலேயே நாம் திசை மாறி வந்து விட்டோம். இதுவரை காலமும் நாம் தொழில் செய்து வந்தும் ஒருபோதும் எல்லை தாண்டி வரவில்லை. எங்களது வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் தான்.  எனவே எங்களது கைதானது எமது குடும்பத்திற்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றார்

No comments:

Post a Comment