10 March 2014

அதிகார மோகம் கொண்ட சிலர் அதிகார பரவலாக்கலை எதிர்க்கின்றனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆகியோரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கம் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையோடு முன்னெடுப்பதற்கான பரந்தளவிலான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ள சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள்  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்குள் உள்ள “அதிகார மோகம்” கொண்ட சிலரே அதிகார பரவலாக்கலை எதிர்க்கின்றனர் என்றார்

இது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் நாயகம் நவிப்பிள்ளை சமர்ப்பித்துள்ள அறிக்கையையும் அமெரிக்கா முன் வைத்துள்ள பிரேரணையையும் ஐ.நா. தலைமையில் சுயாதீன விசாரணை வேண்டுமென வலியுறுத்துகின்றது.

அதில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரச தரப்பு மற்றும் புலிகள் என இரு தரப்பினரிடையேயும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றே கூறுகின்றார்.

கூட்டமைப்பினர் உட்பட பலர் இதற்கு ஆதரவு வழங்குகின்றனர். இவ்வாறான விசாரணைகளை எதிர்க்கின்றோம். அதனோடு உடன்பாடு கிடையாது. அப்படியான விசாரணைகளில் கலந்து கொள்ளவும் எமது அரசாங்கம் தயாரில்லை. இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே ஐ.நா. தலைமையிலான பேச்சுக்கே இடமில்லை.

எமக்கென்று அரசியலமைப்பு சட்டங்கள் உள்ளன. எனவே உள்ளக விசாரணைகளை அதற்கமைய முன்னெடுப்போம். எனவே அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் உட்பட உள்நாட்டு அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு பரந்தளவிலான சுயாதீனமான நம்பகத்தன்மையோடு உள்ளக விசாரணைகளை நடத்த வேண்டும். இதன் மூலம் எமது வெளிப்படைத்தன்மையை உலகிற்கு வெளிக்காட்ட முடியும். அது மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் தலையீடுகளிலிருந்தும் விடுபட முடியும். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும்.

ஐ.நா. எமக்கெதிரான பிரேரணை மற்றும் அதனால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் பொருளாதார தடைகள் வந்தாலும் எவ்வாறு அச்சவாலுக்கு முகம் கொடுப்பது போன்ற விடயங்களை ஆராய்வதற்கு நிபுணர் குழு அமைத்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டுமென்ற யோசனையை அரசில் உள்ள இடதுசாரிகள் (நான் உட்பட) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தோம்.

ஜனாதிபதி எமது யோசனையை நிராகரிக்கவில்லை. கவனம் செலுத்துவதாகவும் ஆராய்வதாகவும் தெரிவித்தார். அந்த யோசனைகளில் அதிகாரத்தை பரவலாக்கி பிரச்சினைக்கு தீர்வாகும் வேறு வழிமுறைகள் கிடையாது.

ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ள சில அதிகார மோகம் கொண்டவர்கள் அதிகாரத்தை பரவலாக்குவதை எதிர்க்கின்றனர். ஆனால் ஜனாதிபதிக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று என்றார் அமைச்சர் வாசு

No comments:

Post a Comment