13 August 2014

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குக

இலங்கை அரசுக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குமாறு இடதுசாரி கட்சிகள் அரசாங்கத்தை கோரியுள்ளன.
 
கொழும்பில் நேற்று (12-08-2010) 1953ம் ஆண்டு ஹர்த்தாலின் 61ஆம் வருட நினைவுதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா கொலுரே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில் இலங்கை அரசின் பங்காளிகளாக இடதுசாரி கட்சிகள் இருக்கின்ற போதிலும் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து கொள்கைகளுக்கும் நாங்கள் இணக்கம் தெரிவிப்பதில்லை.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை இல்லாதொழிப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விடயமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்து நிறைவேற்று அதிகாரம், மற்றும் அரசியலமைப்பு அதிகாரம், நீதிமன்ற அதிகாரத்தை பாராளுமன்றத்தினூடாக செயற்படுத்தக் கூடியவாறான அரசியலமைப்பை ஸ்தாபிக்க அரசாங்கத்தினால் முடியும் என்பதனாலேயே நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் பெரும்பான்மையை வைத்து இதனை மேற்கொள்ளுமாறு கேட்கின்றோம் என்றார்.
 
எனவே அரசாங்கத்தின் ஆரம்ப கட்ட செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு அதேபோல் மக்களின் விருப்புக்கள் தொடர்பிலும் சிந்தித்து பாராளுமன்ற மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாற்றியமைக்குமாறு நாங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
 
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளிப்போம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு பங்களிப்பு செய்வோம் என்ற தொனிப்பொருளில் இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்து

No comments:

Post a Comment