17 July 2015

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடு

தேர்தல் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை.
நாம் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் கடந்த 27 வருடங்களாக பங்கு பற்றி வந்திருக்கிறோhம்..
மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட  காலத்தில் -யாருமே தேர்தல்களில் பங்கு பற்றுவதை நினைத்துப்பார்க்காத காலத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட காலத்தில்  பங்கு பற்றியவர்கள்.
யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் ஜனநாயக மீட்சிக்கான முன்னோடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்த ஜனநாயகத்திற்கான தொடர் இடையறாச் செயற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் பலியாகி இருக்கிறார்கள். இழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள்.
மாகாணசபை -பாராளுமன்றம் -உள்ளுராட்சி தேர்தல்களில் பல்வேறு இன்னல்கள் அபாயங்கள் மத்தியில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.
பரந்த ஜனநாயக ஐக்கியம் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை இடையறாது மேற் கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், அது தொடங்குவதும் சீர் குலைவதுமாகவே வரலாறு பூராவும் இருந்து கொண்டிருக்கிறது.
அப்படி ஒன்றை கட்டாமல் குறைந்த பட்ச புரிதலைத் தன்னும் ஏற்படுத்தாமல் தேர்தலில் பங்குபற்றுவது ஆக்கபூர்வமான பெறுபேறுகளைத்தராது என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.
மக்கள் அவநம்பிக்கை கொள்வதற்கும் ,ஏமாற்று மோசடி சக்திகளை பலப்படுத்துவதாகவுமே அமையும். .
உண்மையில் விசச் சுழல் போல் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது
மக்கள் நலன் சார்ந்த ஜனநாய உணர்வு கொண்ட பரந்து பட்ட ஐக்கிய ஸ்தாபனம் இன்றைய வரலாற்று அவசியமாகும்
அது இன சமூகங்களின் ஜனநாயகம் ஐக்கியம் சமூகத்தில் விழிம்பு நிலையில் உழலும் மக்கள் நலனில் அர்ப்பணத்துடனான மானசீகமான அக்கறை கொண்டதாக அமைய வேண்டும்.
தேர்தல் வந்திட பத்தும் பறந்து போம் என்ற மனப்பாங்குள்ளவர்களால் இதனை ஸ்தாபிக்க முடியாது.
தோழர்களே !நண்பர்களே!!
நாங்கள் 3 தசாப்தங்களாக பல்வேறு இன்னல்கள் சவால்கள் இழப்புக்கள் மத்தியில் பணியாற்றியிருந்தாலும் மீண்டும் விடயங்களை அனுபவங்களினூடு ஆரம்பத்திலிருந்து தொடர வேண்டியிருக்கிறது.
போராட்டம் அர்ப்பணம் தியாகம் என்பன பற்றி எந்த சுரணையுமற்ற -சமூகப்பிரக்ஞை எதுவுமற்ற அயோக்கியர்களே தமிழ் அரசியலில் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள் .
ஒரு சில விலக்குகள் இருக்கலாம்.
இந்த அயோக்கியர்களை தெரிவு செய்யும் வியாதி யாழ்மைய அரசியலின் சாரம்சமாகும்.
இதற்கு மாற்றானதை அமைக்க வேண்டிய வரலாற்று அவசியம் உள்ளது. அந்த தேடல் வழி இம்முறை நாம் தேர்தலில் பங்கு பற்றவில்லை.
நேர்மையான அர்ப்பண சிந்தை கொண்டவர்களுக்கான களமொன்றை ஏற்படுத்துவதற்கு எங்களின் பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறோம்.
அவகாசம் தேவைப்படுகிறது. நவ தாராளவாத உலகில் பெரும் பணச்செலவிலான ஆடம்பர உதாரித் திருவிழவாகவும் இந்தத் தேர்தல் நடைமுறை காணப்படுகிறது.
சாமானியர்கள் தேர்தலில் நிற்பது நினைத்துப்பார்க்க முடியாத விடயமாகி இருக்கிறது. இதனை ஜனநாயகத்தின் சிதைவு எனவும் கொள்ளமுடியும்.
எனவே செம்மை- நேர்த்தி- ஜனநாயக மறுமலாச்சி என்பவற்றை நோக்கி எமை தயார்படுத்த வேண்டியிருக்கிறது.
நன்றி
தி .ஸ்ரீதரன்
செயலாளர்
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

No comments:

Post a Comment