27 October 2015

மழையுடன் கூடிய காலநிலை-இயல்பு நிலை பாதிப்பு

நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நிலை கார­ண­மாக வடக்கு ,கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட­ளா­விய ரீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதுடன் பல­ப­கு­தி­களில் பொது­மக்­களின் இயல்பு நிலை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக பல தாழ்ந்த பிர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. அத்­து டன் மண்­ச­ரி­வினால் பல வீடு­களும் கட்­ட ­டங்­களும் சேத­ம­டைந்­துள்­ளன.
 
இதேவேளை சீரரற்ற காலநிலை காரணமாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரண சேவை­களை அர­சாங்கம் துரி­தப்­ப­டுத்தி வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.  சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக இன்­றைய தினம் காலை வேளை சில பகு­தி­க­ளில் குறைந்­த­ளவில் மழை பெய்யும் என்றும், சில பிர­தே­சங்­க­ளுக்கு மாலை வேளை­களில் இருள் சூழ்ந்த மேக­மூட்­டத்­துடன் இடி மின்னல் தாக்கம் அதி­க­மாக காணப்­படும் என வானியல் அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது.
 
நாட்டில் பல பகு­தி­களில் மாலை வேளை­களில் மின்னல் தாக்கம் அதி­க­மாக காணப்­படும் என்­ப­தனால் பொது­மக்கள் இடி மின்னல் தாக்கம் குறித்து மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்டும் என கால­நிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
நாட்டில் பல பகு­தி­க­ளுக்கும் கடந்த மூன்று வாரங்­க­ளாக மிகவும் மோச­மான கால­நிலை நிலவி வரு­கி­றது. இதன் கார­ண­மாக பல பகு­தி­க­ளிலும் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்கள் ஏற்­பட்டு மக்­களின் இயல்பு நிலை வெகு­வாக பாதிக்­கப்­பட்ட வண்­ண­முள்­ளன. களுத்­துறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாறை, மஸ்­கெ­லியா,அநு­ரா­த­புரம் மற்­றும பொலன்­ன­றுவை உள்­ளிட்ட சில சில பிர­தே­சங்­க­ளுக்கு வெள்ளம் பெருக்­கெ­டுத்­த­மை­யினால் மக்கள் பெரும் அவ­தி­யுற்ற வண்­ண­முள்­ளனர். குறித்த அனர்த்­தங்ளின் கார­ண­மாக மக்கள் இடம்­பெ­யர்ந்த வண்­ண­முள்­ளனர்.
இது இவ்வாறிருக்க எட்டு மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­த நிலையில் குறித்த பிர­தே­சங்­க­ளுக்­கான எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்­ளது.
 
இதே­வேளை நேற்­றைய தினமும் பல பகு­தி­களில் வெள்ளப் பெருக்­கெ­டுத்­த­மை­யினால் பல பிர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. குறிப்பாக அநூ­ரா­த­புரம் , பொலன்­ன­றுவை , மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை திரு­கோ­ண­மலை உட்­பட வட மாகாண த்திலும் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே­போன்று நீர்­தேக்­கங்கள் பெருக்­கெ­டுத்­த­மை­யினால் பல நீர்­தேக்­கங்­களின் வாயில்கள் திறக்­கப்­பட்­டுள்­ளன.
 
சீரற்ற கால­நிலை கார­ண­மாக வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­க­ளில விவ­சாய நிலங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. இதன்­கா­ர­ண­மாக குறித்த பிர­தே­சங்­களில் விவ­சாயம் முழு­மை­யாக பாதிக்­க­ப்பட்­டுள்­ளது. மேலும் மலை­யக பகு­தி­களில் தோட்­ட­பு­றங்­களில் மண்­ச­ரிவு அதி­க­ளவில் இடம்­பெற்று வரு­வதன் கார­ண­மாக பல வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. அத்­துடன்
தோட்­ட­புற மக்­களின் தொழில் நடவடிக்கைகள் பெரு­ம­ள­வில பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சில பகு­தி­களில் பலத்த காற்றின் கார­ண­மாக மரம் முறிந்து விழுந்தமையால் வீதி போக்­கு­வ­ரத்து நடவடிக்கைகளும் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதே­வேளை அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வதில் அர­சாங்கம் துரி­த­மாக செயற்­பட்டு வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.
 
இந்­நி­லையில் இன்­றைய கால­நிலை தொடர்­பான அறி­வித்­தலை நேற்­றைய தினம் கால­நிலை அவ­தான நிலையம் விடுத்திருந்தது. இதற்­க­மைய நாட்டின் கொழும்பு உள்­ளிட்ட வடக்கு, கிழக்கு, வட மத்­திய, மற்றும் ஊவா மாகா­ணங்­களில் காலை வேளை­களில் குறைந்­த­ள­வி­லான மழை பெய்யும் என்றும் மாலை வேளை­களில் இடி மின்னல் தாக்கம் அதி­க­மாக காணப்­படும்.

No comments:

Post a Comment