22 December 2015

நல்லாட்சியும் அரசியல் துணிவாற்றலும்

இரா­ணுவம் என்­பது எந்தச் சமூ­கத்­தி­லி­ருந்து தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றதோ அந்தச் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தக்­கூ­டிய நுணுக்க உரு­மா­திரி என்று கூறலாம். இலங்கைச் சமு­தாயம் குறைந்­த­பட்சம் 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஓயாத வன்­முறைக் குற்றச் செயல்­களை அனு­ப­வித்துக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது. கொலை மற்றும் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்துக் கொண்டு வரு­கின்­ற­தென்றால் அதன் அர்த்தம் ஒவ்­வொரு இலங்­கை­யரும் ஒரு கொலை­யாளி அல்­லது காமுகன் என்­ப­தல்ல.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யிலும் கூட சிறு­வர்­களைப் பாலியல் கொடு­மைக்கு உட்­ப­டுத்­து­கின்ற சம்­ப­வங்கள் உட்­பட சாதா­ரண பிர­ஜை­க­ளுக்கு எதி­ராக சீருடை அணிந்­த­வர்கள் இழைக்­கின்ற குற்றச் செயல்கள் பெரு­வா­ரி­யாக இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. இதன் அர்த்தம் இரா­ணு­வத்தில் உள்­ள­வர்கள் எல்­லோ­ருமே கிறி­மி­னல்கள் என்­ப­தல்ல; இவர்­களில் சிலர்தான் கிறி­மி­னல்கள். போர்க்­கா­லத்தில் அவர்­களின் சாத­னை­க­ளையோ அல்­லது அவர்­களின் குற்றச் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் இன அடை­யா­ளத்­தையோ பொருட்­ப­டுத்­தாமல் இவர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.
சீருடை, அதை அணிந்­தி­ருப்­ப­வரே சட்­டத்­துக்கு மேலா­னவர் என்று ஆக்­கி­வி­டக்­கூ­டாது. சட்­டத்தின் ஆட்சி எங்­கெல்லாம் பல­வீ­ன­மா­ன­தாக இருக்­கி­றதோ அங்­கெல்லாம் சீருடை அணிந்­த­வர்கள் சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் போன்று நடத்­தப்­ப­டு­கின்ற போக்கைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஆனால், அதுவே கொள்­கை­யாக அல்­லது மீற­மு­டி­யாத கோட்­பா­டாக மாறி­வி­டக்­கூ­டாது. வெற்­றி­க­ர­மான போர் நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்ற எவர் மீதும் எந்தக் குற்றச் செய­லுக்­கா­கவும் வழக்­குத்­தொ­ட­ரப்­ப­டக்­கூ­டாது என்று கூறும் போது ராஜபக் ஷ முகாம் இத்­த­கைய ஒரு விலக்­கீட்­டு­ரி­மை­யையே கோரு­கின்­றது. இலங்கை சர்­வ­தேச ரீதி­யாக எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னைகள் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான அதன் போரின் விளை­வா­ன­வை­யல்ல. ராஜபக் ஷாக்­களின் அர­சியல் பிர­சார கோணங்­கித்­த­னங்­களின் விளை­வா­கவே போருக்கு மனி­தா­பி­மான நட­வ­டிக்கை என்று நாம­க­ரணம் சூட்­டிய ராஜபக் ஷாக்கள் அந்த நட­வ­டிக்­கை­களின் போது குடி­மக்கள் எவரும் பலி­யா­க­வில்லை என்ற தங்­களின் கூற்றை நடை­முறை யதார்த்­த­மாக ஏற்­க­வேண்­டு­மென்று உத்­த­ர­விட்­டார்கள். தமிழ்க் குடி­மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய சாத்­தியம் குறித்து தெரி­விக்­கப்­பட்ட எந்தக் கருத்தும் துரோ­கத்­தனம் என்றே வர்­ணிக்­கப்­பட்­டது. தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புகள் பாதிப்­புகள் குறித்து செய்தி வெளி­யிட முடி­யா­த­வாறு ஊட­கங்கள் தடுக்­கப்­பட்­டன. அத்­த­டையை மீறிச் செயற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிங்­க­ளப்­புலிகள் என்று நாம­க­ரணம் சூட்­டப்­பட்­டனர். எவ்­வ­ள­வுதான் கச்­சி­த­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் கூட, மனிதத் தவ­று­களின் கார­ண­மான பக்­க­வி­ளை­வு­களில் விடு­பட்­ட­தாக எந்­தப்­போ­ருமே இல்லை. போர் தொடர்­பான இந்த உண்­மையை ராஜபக் ஷாக்­களின் கொள்கை நிரா­க­ரித்­தது. அப்­பட்­ட­மான பொய்­யு­ரைப்பு மூல­மா­கவும் இருட்­ட­டிப்பு மூல­மா­கவும் இந்த விசித்­தி­ர­மான நிரா­க­ரிப்பு பேணப்­பட்­டது.
ஆப்­கா­னிஸ்­தானின் குண்டுஸ் நகரில் மருத்­து­வ­மனை மீது மேற்­கொள்­ளப்­பட்ட விமானக் குண்டு வீச்­சுத்­தாக்­கு­தலில் பலர் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து அமெ­ரிக்கா என்ன செய்­ததோ அதை ராஜபக் ஷாக்­களும் செய்­தி­ருப்­பார்­க­ளே­யானால், இலங்­கையின் நிலை எவ்­வா­றாக மேம்­பட்­ட­தாக இன்று இருந்­தி­ருக்கும். குற்­றச்­சாட்­டுக்­களில் குறைந்­த­பட்சம் சில­வற்­றை­யா­வது விசா­ரணை செய்து அவ­சி­ய­மா­ன­போது மனிதத் தவ­று­களை ஒப்­புக்­கொண்டு மன்­னிப்­புக்­கேட்டு இழப்­பீட்­டையும் வழங்­கி­யி­ருக்க வேண்டும்.
இன்­னொரு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், குண்டுஸ் நகர் தாக்­கு­தலைப் போலன்றி, இலங்­கையில் உயி­ரி­ழந்த இவ்­வாறு பாதிப்­புக்­குள்­ளான குடி­மக்கள் அனை­வரும் எமது சொந்த பிர­ஜை­க­ளே­யாவர். போரின் போது இடம் பெற்­றி­ருக்­கக்­கூ­டிய சகல குற்றச் செயல்­க­ளையும் நீதியின் முன்­நி­றுத்த முடி­யாது. ஆனால் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்தின் மனங்­களை வென்­றெ­டுக்க வேண்­டு­மாக இருந்தால், மனக்­கா­யங்­களை குணப்­ப­டுத்த வேண்­டு­மாக இருந்தால் சில­குற்றச் செயல்­களை நீதியின் முன்­நி­றுத்­தி­யே­யா­க­வேண்டும்.
ராஜபக் ஷாக்­களின் கொள்கை கார­ண­மாக போர் காலங்­களின் போது இழைக்­கப்­பட்ட குற்றச் செயல்­களில் ஒன்று கூட நீதியின் முன்­நி­றுத்­தப்­ப­ட­வில்லை. நீதி மறுப்பு முற்­று­மு­ழு­தா­ன­தாக இருந்­தது. இந்த நீதி­ம­றுப்பு போர் வல­யத்­துக்கு வெளியே இழைக்­கப்­பட்ட குற்றச் செயல்­க­ளுக்கும், ஏன் நான்­காவது ஈழப்போர் தொடர்­வ­தற்கு முன்­ன­தாகக் கூட விஸ்­த­ரிக்­கப்­பட்­டது. 2006 திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். சுட்­டுக்­கொல்லப்­பட்ட மாண­வர்­களை குண்­டு­களை வைத்­தி­ருந்த புலிகள் என்று காட்­டு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி இவ்­வா­றான சட்­ட­ம­ருத்­துவ அதி­கா­ரியின் துணிச்­ச­லான தொழில்சார் திற­மையின் கார­ண­மாக தோல்வி கண்­ட­தால் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். ஆனால் அர­சாங்கம் நீதித்­து­றையின் செயற்­பா­டு­களில் தலை­யிட்ட அதே­வேளை, சாட்­சி­யங்­க­ளையும் கொலை­யுண்ட மாண­வர்­களின் குடும்­பத்­த­வர்­க­ளையும் இரா­ணுவம் அச்­சு­றுத்­தி­யது. ராஜபக் ஷாக்கள் ஆட்­சியில் இருந்­த­வரை தமி­ழர்கள் எந்­த­வொரு நீதி­யையும் எதிர்­பார்க்க முடி­ய­வில்லை என்­பதை இந்த விவ­காரம் சந்­தே­கங்­க­ளுக்கு இட­மின்றி நிரூ­பித்­தது.
அர­சாங்­கங்கள் அவற்றின் சொந்த மக்­க­ளுடன் நீதி­யாக நடந்து கொள்­ளா­த­போது அந்­த­மக்கள் நீதிக்­காக வெளி அமைப்­புக்­க­ளையும் சக்­தி­க­ளையும் நோக்கித் திரும்­பு­கி­றார்கள். அதிர்ச்சி தரத்­தக்க இத்­த­கைய செயல்கள் இலங்­கையின் நீதித்­து­றையை இழி­வு­ப­டுத்­தி­ய­துடன் இலங்கைத் தமி­ழர்­களின் கண்­களின் முன்னால் அந்த நீதித்­து­றை­களின் நம்­ப­கத்­தன்­மையும் நிர்­மூலம் செய்­யப்­பட்­டது. ராஜபக் ஷாக்கள் தாங்­க­ளா­கவே உரு­வாக்­கிய பிரச்­சி­னையில் இருந்து அர­சியல் அனு­கூ­லத்தைப் பெறு­வ­தற்கு இப்­போது முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
போர் நாய­கர்­களும் நீதியும்
அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு ராஜபக் ஷாக்­க­ளுக்கு ஒரே­யொரு பாதையே இருக்­கி­றது. சிங்­கள - பௌத்த இன­வெ­றியைத் தூண்­டி­வி­டு­வதே அந்தப் பாதை­யாகும். அமெ­ரிக்­காவில் குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பாளர் நிய­ம­னத்தைப் பெற­மு­யற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்ற டொனால்ட் டிரம்பும் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­களை பிரான்ஸில் முன்­னெ­டுக்­கின்ற லீபென்ஜும் செய்­வதைப் போன்று சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் அச்­ச­வு­ணர்வை ஏற்­ப­டுத்தி ஏதோ பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலையில் உள்­ள­வர்­க­ளாக அவர்­களை உண­ர­வைப்­பதே ராஜபக் ஷாக்­களின் முக்­கி­ய­மான தந்­தி­ரோ­பா­ய­மாக இருந்­தது. தொடர்ந்தும் அவ்­வாறே இருக்­கி­றது. அதன் கார­ணத்­தி­னால்தான் போரில் பாதிக்­கப்­பட்ட சில தமிழ் குடி­மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கான முயற்­சியும் எந்­த­வி­த­மான குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­ப­டா­ம­லி­ருக்கும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழான தடுப்­புக்­காவல் கைதி­களை விடு­தலை செய்­வ­தாக அர­சாங்கம் அளித்த உறு­தி­மொ­ழியும் ஒரு­மித்துப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.
ஒரு குறிப்­பிட்ட கால­மௌ­னத்­துக்குப் பிறகு முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜபக் ஷ அண்­மையில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். போர் நாய­கர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கின்ற அதே­வேளை அர­சாங்கம் விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்­கின்­றது என்று அவர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார். விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் பிர­தான நிதி சேக­ரிப்­பா­ளரும் ஆயுதக் கொள்­வ­ன­வா­ள­ரு­மான கே.பி. என்று அழைக்­கப்­ப­டு­கின்ற குமரன் பத்ம­நாதன் விவ­கா­ரத்தை கோத்தபாய ராஜ
பக் ஷ மறந்­து­விட்டார் போலும்.
பல தமிழ் ஆண்­களும் பெண்­களும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டாமல் வரு­டக்­க­ணக்­காக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற அதே­வேளை, கே.பி. சிறப்­பு­ரி­மை­யுடன் கூடிய பிர­ஜை­யாக மாறி­யி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இவ­ருக்கு எதி­ராக எந்­த­வொரு சான்­றையும் கண்­டு­பி­டிக்க சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் இய­லாமல் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்ற கார­ணத்தால் அவர் சுதந்­தி­ர­மாக வாழ்­கிறார்.
‘போர் நாய­கர்­களை‘ பாது­காப்­ப­தற்கும் விடு­தலைப் புலி­களைத் தண்­டிப்­ப­தற்கும் ராஜபக் ஷாக்கள் கடைப்­பி­டிக்­கின்ற வழி­முறைகள் பெரிதும் பார­பட்­ச­மா­ன­வை­யாகும். யார் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் யாருக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட வேண்டும் என்­ப­தையும் தீர்­மா­னிப்­பதில் பிர­தா­ன­மான அளவு கோல் ராஜ­பக் ஷாக்­களின் நிலைப்­பா­டு­க­ளிலே இருந்து வந்­தி­ருக்­கின்­றது. ராஜபக் ஷாக்­களின் செல்லப் பிரா­ணி­க­ளாக மாறிய அந்த விடு­த­லைப்­பு­லிகள் இயக்க முக்­கி­யஸ்­தர்கள் சுதந்­தி­ர­மாக வாழ அனு­ம­திக்­கப்­பட்ட அதே­வேளை ராஜபக் ஷாக்­களை எதிர்த்த ‘போர் நாய­கர்கள்’ கொடு­மைக்­குள்­ளாக்­கப்­பட்­டார்கள். இந்தக் கதிக்­குள்­ளா­வ­தற்கு ஒரு ‘போர் நாயகன்’ ராஜபக் ஷாக்­களின் அர­சியல் எதி­ர­ணி­யாக இருக்க வேண்­டி­ய­தில்லை. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்­வாவின் மக­னுடன் சண்­டை­யிட்ட சிரேஷ்ட இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரி­யொ­ருவர் வேட்­டை­யா­டப்­பட்டார். தன்­னைத்­தானே குற்­ற­வா­ளி­யென்று கூற­வைக்­கப்­பட்டு அவ­மா­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்டார்.
அர­சுக்கும் சமு­தா­யத்­துக்கும் இடையே அடிப்­ப­டையில் அமைப்­பியல் சார்ந்த ஐக்­கி­யமும் பொது­வான பண்பு விழு­மி­யங்­களும் (Organic Unity and Shared Values) இல்­லா­த­மையே மூன்றாம் உலக அரசின் வலு­வற்ற தன்­மைக்­கான தனி­யான மிகப்­பி­ர­கா­ச­மான கார­ண­மாகும் என்று அர­சியல் மற்றும் வெளி­யு­றவு விவ­கார நிபு­ண­ரான பேரா­சி­ரியர் கிறிஸ்தோக் கிளப்ஹாம் (Third World Politics; and Introduction) என்று நூலில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.
சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தின் மீதான (தேசப்­பற்று என்ற போர்­வையில்) விசு­வாசத்தை உயர்­வாகப் போற்றிப் புகழ்­தலும் சிங்­கள சமூ­கத்­துக்கும் (தங்­களின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ்) இலங்கை அர­சுக்கும் இடையே அமைப்­பியல் சார்ந்த ஐக்­கி­யத்தை தோற்­று­வித்து பேணு­வ­தற்­காக ராஜபக் ஷாக்­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட ‘பொதுப் பண்பு­க­ளாகும்’, ராஜபக் ஷாக்­களை இவர்­களின் சிங்­கள - பௌத்த தளத்­துடன் இணைக்­கின்ற பிர­தான கிளை­யாக இரா­ணு­வமே விளங்­கியது.
அவர்­களின் இந்தத் தந்­தி­ரோ­பாயம் தோல்­வி­கண்­டதை கடந்த இரு தேர்­தல்­க­ளிலும் மக்கள் வாக்­க­ளித்த பாங்கு வெளிக்­காட்­டி­யது. அதை மீட்­டுயிர் பெறச்­செய்­வ­தற்கு ராஜபக் ஷ தற்­போது மேற்­கொண்­டி­ருக்­கின்ற முயற்­சிகள் வெற்றி பெறுமா இல்­லையா என்­பது பிர­தா­ன­மாக பொரு­ளா­தா­ரத்­திலேயே தங்­கி­யி­ருக்­கின்­றது.
மைத்­திரி -– ரணில் அர­சாங்­கத்­தினால் சாதா­ரண இலங்­கை­யர்­களின் வாழ்க்கை நிலை­மையை மேம்­ப­டுத்த முடி­யு­மாக இருந்தால், பீதி­யையும் வெறுப்­பையும் தூண்­டி­வி­டு­வ­தற்கு ராஜபக் ஷ மேற்­கொள்­கின்ற சூழ்ச்­சித்­த­ன­மான நட­வ­டிக்­கைகள் தோல்­வி­ய­டையும். பெரும்­பா­லான சாதா­ரண படை­வீ­ரர்கள் போர்க் குற்­றங்­களைச் செய்­ய­வில்­லை­யென்­பதால், அத்­த­கைய குற்­றங்­களைச் செய்­த­வர்­களை நீதியின் முன் நிறுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய எந்­த­வொரு முயற்­சி­யி­னாலும் அவர்கள் பாதிக்­கப்­ப­டப்­போ­வ­தில்லை. ஆனால், பொரு­ளா­தாரம் சரி­யாக செயற்­ப­ட­வில்­லை­யானால் சாதா­ரண மக்கள் மீது புதிய அர­சாங்கம் சுமை­களை ஏற்­று­மானால் ‘துரோகம்’ என்று ராஜபக் ஷ எழுப்­பு­கின்ற கூக்­குரல், சாதா­ரண சிங்­கள மக்­களின் உணர்­வு­க­ளுடன் ஒத்­த­தாக எதி­ரொ­லிக்கக் கூடிய சூழ்­நிலை தோன்­றலாம். இந்த சாதா­ரண குடும்­பங்­களில் இருந்து வந்­த­வர்­கள்தான் சாதா­ரண படை­வீ­ரர்கள்.
ஒரு பொரு­ளா­தாரம் நெருக்­க­டிக்­குள்­ளாகி, சாதா­ரண மக்கள் தங்­க­ளது எதிர்­காலம் குறித்து அச்­ச­ம­டை­கின்ற போதுதான் வழ­மை­யாக தீவி­ர­வா­திகள் பய­ன­டை­கின்­றார்கள். ஜேர்­ம­னியில் நாஜி­களைப் பொறுத்­த­வரை எது உண்­மை­யாக இருந்­ததோ அதுவே ராஜபக் ஷாக்­க­ளையும் பொது­ப­ல­சேனா போன்ற அவர்­களின் நேச­சக்­தி­க­ளையும் பொறுத்­த­வரை இலங்­கை­யிலும் உண்­மை­யா­ன­தாக இருக்­க­மு­டியும்.
நம்­ப­கத்­தன்மை இடை­வெளி
2013 ஆண்டு ஒருநாள் விடி­கா­லையில் முன்னாள் பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்கப் போனார். ராஜபக் ஷ அப்­போது உடற்­ப­யிற்சி செய்து கொண்டு தலை­கீ­ழாக நின்றார். பத்­தி­ரி­கை­யாளர் பேச்சுக் கொடுத்­த­போது அதற்கு ராஜபக் ஷ ‘நாங்கள் பல நல்ல காரி­யங்­களைச் செய்­தி­ருக்­கிறோம். எதிர்க்­கட்­சி­யினர் அவற்றில் எதை­யுமே பார்க்க முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அதனால் தலை­கீ­ழாக நின்று இலங்­கையை எவ்­வாறு பார்க்க முடி­யு­மென்று முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கிறேன்’ என்று பதி­ல­ளித்­தாராம்.
ராஜபக் ஷவின் பார்வை தலை­கீ­ழா­ன­தாக இருந்த கார­ணத்தால் 2014ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் ஆபத்­துக்­கான அறி­கு­றி­களை அவரால் பார்க்க முடி­யாமல் போய் விட்­டது போலும், மைத்­திரி - – ரணில் அர­சாங்­கமும் அத்­த­கைய தலை­கீ­ழான பார்­வை­யினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற நிலை வந்­தி­ருக்­கி­றதோ?  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சுற்­றா­ட­ல் அமைச்­ச­ராக இருக்­கின்றார். அந்த அதி­காரம் தொடர்பில் அவர் கூறு­கின்ற பல கருத்­துக்­களில் தவறு கண்­டு­பி­டிக்க முடி­யாது. அவர் கூறு­கின்­றவை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா இல்­லையா என்­ப­துதான் பிரச்­சினை. மேல் மாகா­ணத்தில் பொது மக்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் குடி­நீ­ருக்­கான ஆதா­ர­மாக இருக்கும் களனி ஆறு மாசு­ப­டுத்­தப்­ப­டு­கின்ற பிரச்­சினை இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும். ஆற்று நீரை அசுத்­தப்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் பல­ருக்கு எதி­ராக அண்­மைய வாரங்­க­ளாக அதி­கா­ரிகள் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றார்கள். சிறி­ய­ளவில் மாசு­ப­டுத்­தலை செய்­கின்­ற­வர்­க­ளுக்கும் எதி­ராக பெரும்­பாலும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கும் எதி­ராக மாத்­தி­ரமே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.கொக்­கா­கோலா நிறுவம் போன்று பெரி­ய­ளவில் மாசு­ப­டுத்­தலை செய்­கின்­ற­வர்கள் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வர்­க­ளாக தொடர்ந்தும் இருந்­து­வ­ரு­கி­றார்கள். இந்தக் நிறுவனம் இவ்­வ­ருடம் இரு தட­வைகள் அதன் கழி­வு­களை களனி ஆற்று நீரில் கலக்க விட்­டி­ருக்­கி­றது.
சீனாவின் வளர்ச்சிப் பாணி அந்­நாட்­டி­லேயே பார­தூ­ர­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது என்­பது இப்­போது வெளிப்­ப­டை­யா­னது. வளி­மண்­டலம் மாசடை­வதன் விளை­வாக தொழிற்­சா­லை­களை மூடு­கின்ற கதைக்கு பெய்ஜிங் நில­வரம் மோச­மா­கி­யி­ருக்­கி­றது.
வெறுக்­கத்­தக்க துர்நாற்றம் நக­ரெங்கும் பரவி மக்­களின் உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாக சுவா­சப்­பி­ரச்­சி­னை­களைத் தோற்­று­விக்­கின்­றது. இதை பெய்ஜிங் ரைம்ஸ் பத்­தி­ரிகை மிகவும் பொருத்­த­மான முறையில் ‘Airpocalypse’ என்று வர்­ணித்­தி­ருக்­கி­றது.
கொழும்பு துறை­முக நகரம் போன்ற சீனாவின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற திட்­டங்கள் குறித்து மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் நோக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த போது கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்­டத்தை அது எதிர்த்­த­தற்கு முன் வைத்­த­வாதங்­களில் ஒன்று சுற்­றாடல் பாதிப்பாகும். தாங்கள் ஆட்­சிக்கு வந்தால் அத்­திட்டம் இரத்துச் செய்­யப்­ப­டு­மென்று ரணில்­விக்­கி­ரம சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இத்­திட்­டத்தை கண்­டித்­த­வர்கள் இப்­போது மௌனம் சாதிக்­கி­றார்கள். இவ்­வ­ருடம் அத்­திட்டம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­படும் என்­ப­தற்­கான அறி­கு­றிகள் தெரி­கின்­றன. முன்னர் அதை எதிர்த்­த­வர்கள் ஏன் இப்­போது மௌனம் சாதிக்­கி­றார்கள்? அவர்கள் தவ­றா­ன­வர்கள் என்றும் ராஜபக் ஷாக்கள் சரி­யா­ன­வர்கள் என்றும் இதை அர்த்­தப்­ப­டுத்­த­லாமா? அல்­லது இவர்கள் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு விலைபோய் விட்­டார்­களா? அமெ­ரிக்­காவின் நெருக்­குதல் கார­ண­மா­கத்தான் கொக்கா கோலா நிறுவனத்துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லையா? மைத்­தி­ரி­பா­ல­வை மஹிந்த சிந்­தனை சுவீ­க­ரித்து விட்­டதா?
சிறிய மீன்­களைப் பிடிக்­கின்ற அதே­வேளை பெரிய சுறா­மீன்கள் தப்பிச் செல்ல விடப்­ப­டு­கின்ற நடை­முறை சுற்­றா­டலில் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இல்லை. அது ஊழல் மோசடி தொடக்கம் பல்­வேறு விவ­கா­ரங்­க­ளுக்கும் பொது­வா­ன­தா­கவே இருக்­கி­றது. புதிய அர­சாங்­கத்­துக்கும் அதற்கு வாக்­க­ளித்த சமு­தா­யப்­பி­ரி­வி­ன­ருக்கும் இடை­யே­யான பொது­வான பண்பு விழு­மி­ய­மாக நல்­லாட்­சிக்­கான அடிப்­படைக் கோட்­பாடே அமைந்­தி­ருந்­தது. ராஜபக் ஷ ஆட்­சிக்கும் புதிய மைத்­திரி – ரணில் அர­சாங்­கத்­துக்கும் இடை­யே­யான பிரி­கோ­டாக நல்­லாட்­சியே காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஊழல், குடும்ப அரசியல் அதிகாரம், ஒடுக்குமுறை ஜனநாயகவிரோத, மக்கள் விரோத மற்றும் இன, மதவெறி கொள்கைகளை தூக்கியெறிவதாகவே இருக்க வேண்டும். ராஜபக் ஷவின் ஆட்சி முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஆட்சிமுறையே முன்னெடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு அரசாங்கத்தினதும் உயிர்க்குருதி நம்பிக்கைத்தன்மையோடும் நம்பகத் தன்மையில்லாமல் எந்தவொரு கட்சியும் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கவோ அல்லது அதிகாரத்துக்கு வரவோ முடியாது. தங்களது அதிகாரத்துடனான நம்பகத்தன்மையை இழந்ததன் காரணத்தினாலேயே ராஜபக் ஷாக் கள் அதிகாரத்தை இழந்தார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பெருமளவு இடைவெளி இருக்குமானால் என்னதான் திருகுதாளத்தைச் செய்தாலும் எவ்வளவுதான் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருந்தாலும் நம்பகத்தன்மை அரித்துச் செல்லப்படுவதை தடுக்கவே முடியாது. நம்பகத்தன்மையில்லையென்றால் முன்னென் றுமில்லாத அளவுக்கு அதிகாரத்தைத் துஷ்பிர
யோகம் செய்தாலும் கூட வரையறை யின்றி பணத்தைச் செலவிட்டாலும் கூட தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது.
நல்லாட்சியின் நெறிமுறையை புதிய அரசாங்கம் மீறுகின்ற ஒவ்வொரு தடவை யும், ராஜபக் ஷாக்கள் கடைப்பிடித்த அணுகு முறைகளை புதிய அரசாங்கம் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தடவையும் அதன் நம்பகத்தன்மை அரித்துச் செல்லப்படுகிறது. மத்திய வங்கி யின் பிணை முறி விவகாரத்தில் இதுவே நடந்தது. குடும்ப அரசியல் செல்வாக்கு மீண்
டும் தலைகாட்டுக்கின்ற போதும் இது நேருகிறது. கறைபடிந்த பேர்வழிகள் ராஜபக்
ஷாக்களைக் கைவிட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவையோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ அரவணைத்து அரசாங்கத்தில் பதவிகளைப் பெறும் போதும் இது நேருகிறது.
நீதியமைச்சராகவும் புத்தசாசன அமைச் சராகவும் இருப்பவர் விசித்திரமான முறையில் தவறாக நடந்துவிட்டு தொடர்ந்தும் பதவியில் நீடிக்கும் போதும் இது நேருகிறது. வில்பத்து சரணாலயம், சிங்கராஜா மலைக் காடுகளும் நாசமாக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் போது இது நேருகிறது.
ராஜபக் ஷாக்களின் அழுக்கை துப்புரவு செய்வதென்பது சுலபமான பணியல்ல. ஆனால் அந்த அழுக்கிற்கு மேலும் அழுக்கைச் சேர்ப்பது பணியை கடினமாக்கவே செய்யும்.

திஸ்­ஸ­ரணி குண­சே­கர 


நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment