23 February 2016

ஜே.ஆர், பிரேமதாச, மகிந்த - அதிகாரங்களை கைகளுக்குள் வைத்திருந்தனர்

பாராளுமன்றத்தில் குவிந்திருந்த அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதிகளான -ஜே.ஆர்.ஜெய­வர்­த்தன, ஆர்.பிரே­ம­தாச, மஹிந்த  போன்றோர் சிறிது சிறி­தாக தம­தாக்கி தமது கைக­ளுக்குள் அதி­கா­ரங்­களை வைத்­தி­ருந்­தனர். இத்­த­கைய வலிப்பு வியாதி நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­தி­ருந்த சகல ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் ஏற்­பட்டிருந்தது. இருப்­பினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அத்­த­கைய நிலை ஏற்­ப­ட­வில்லை என அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம  ஹத்­து­ர­லி­யத்தைப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற கூட்டம் ஒன்­றி­லேயே இவ்­வாறு   தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, ஜனா­தி­பதித் தேர்தலில் தோல்­வி­ய­டைந்­ததை அடுத்து மஹிந்த ராஜ­ப­க் ஷ­வை கட்­சியின் தலை­மைப்­ப­த­வியில் இருக்கும்படி கேட்­டுக்­கொண்டோம். ஆனால் அது தனக்கு வேண்டாம் என்றும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கே கொடுத்­து­விடும் படியும் மஹிந்த ராஜ­பக் ஷ கூறினார். அவ­ரது மனது வருத்­தத்தில் இருந்­தாலும் அவர் என்றும் கட்­சியை இரண்­டாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க மாட்டார். தான் பிறந்­ததும் அக்­கட்­சி­யில்தான், மர­ணிப்­பதும் அதே கட்­சி­யில்தான் எனக்­கூ­றி­யவர் அவர்.

இன்னும் இரண்டு வாரங்­களில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்­பாக யார் யார் போட்­டி­யி­டு­வது என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட உள்­ளன. அவ்­வாறு விண்­ணப்­பிப்­போ­ரது தரத்தை நன்கு அறிந்தே அவர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும். அவர்கள் கட்­சியின் கொள்­கைக்கு சார்­பா­ன­வர்­களா, கட்­சியின் உத்­த­ர­வு­களை உதா­சீனம் செய்­த­வர்­களா? அல்­லது ஒட்­டு­மொத்­த­மாக கட்­சிக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­களா என்ற அனைத்து விட­யங்­க­ளையும் நிய­ம­னப்­பத்­திரம் வழங்­கு­வ­தற்கு முன் தேடிப்­பார்ப்போம். அவை எப்­படி இருப்­பினும் கிராம மட்­டத்தில் உள்ள கட்­சிக்­கி­ளை­க­ளுக்கு கூடுதல் அதி­காரம் வழங்கி அவர்கள் விதந்­துரை செய்­பவ­ர்­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிப்போம்.

ஜனா­தி­ப­தி மைத்­தி­ரி­பால சிறிசேன அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறியே அவர் தனது கடமைகளைப் பொறுப் பேற்றார். நிறைவேற்று அதிகாரத்தின் இறகு களை வெட்டி அகற்றி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் போது மறுபுறமாக தேர்தல் முறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment