24 July 2016

யாழ்ப்பாண வளாகத்தில் நடந்த கலவரத்துக்கு எங்கள் தீவிர கவனம் தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞ}ன பீடத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின்போது தமிழ் மற்றும் சிங்கள மாணவரிடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்கு பலராலும் திடீரென அளவுக்குமீறிய பதில்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலானவர்கள் சுய நீதவான்களாக மாறி சீற்றத்தை வெளியிட்டிருந்தனர், சிலர் “நாங்கள் சொன்னோம் தானே தமிழ் புலிகள் உயிருடன் நன்றாக இருக்கிறார்கள் என்று”  எனச் சொல்லி ஒருவகை களிப்படைந்தார்கள், மற்றும் ஒரு சிலர் (மிகச் சிலர்) இந்த நிகழ்வின் தீவிரம் பற்றி பிரதிபலித்தார்கள் மேலும்; நல்லிணக்கம் மற்றும் சமூக உறவுகள் தொடர்பில் இதன் அர்த்தம் என்ன என்று அங்கலாய்த்தார்கள்.
தேசியவாதம் எல்லா வடிவங்கள் மற்றும் அளவுகளில் அருவருப்புக்கு உயர்வு கொடுக்கிறது - இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல ஆனால் எல்லா இடத்திலும் உள்ளது. அலுவலர்களின் ஊர்வலத்தில் கண்டிய நடனக்கலைஞர்களை சேர்ப்பதற்கு சிங்கள மாணவர்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டுமா? நிச்சயமாக ஆம். பல்கலைக்கழக அதிகாரிகள் இத்தகைய முறுகல்களுக்கான அதிக முயற்சிகளை எதிர்பார்த்து அவர்களுக்கு இடையில் பாலம் போடும் பொறிமுறைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டுமா? அதற்கும் கூட ஆம் என்பதே பதில். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞ}ன பீடத்தில் 60 விகிதமானவர்கள் சிங்கள மாணவர்கள் என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது – அவர்கள் 30 வருடங்களாக வன்முறை மோதல் சூழ்ந்திருந்த போரில் தோற்றுப் போனவர்கள் என்கிற தொடர்ச்சியான நினைவூட்டல்களால் துன்புறும் தமிழ் சமூகத்தின் மேலாதிக்கம் நிறைந்த இடத்தில் வாழ்கிறார்கள், குறைந்த பட்சம் போரின் வெற்றியை குறிக்கும் பல நினைவுச் சின்னங்கள், தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் மற்றும் சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் அடையாளங்களின் இருப்பு எப்போதும் அதிகரித்துக் கொண்டு போகும் சூழ்நிலை அங்கு உள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சில நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இந்த சம்பவம் பற்றி கலந்துரையாடியபோது, அவர்களின் வெறுப்பு எனக்குள் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இப்போது (சில அரசியற் குழுக்கள் என கணிப்பிடலலாம்) தமிழ் தேசியவாதம் என்றும் மற்றும் அதனால் தமிழ் பயங்கரவாம் உயிருடன் நலமாக உள்ளது எனக் கூறுவதற்கு பயன்படப் போகிறது என்பதினாலேயே அவர்கள் வெறுப்படைந்தார்கள்
 பல வருடங்களாக பல்கலைக்கழகத்தில் தனிமைப்பட்டிருந்த மாணவர் சமூகத்தில்; திடீரென விரிவாக்கம் ஏற்பட்டதின் காரணமாக இயல்பாகவே எழக்கூடிய பலவித கடினமான சூழ்நிலைகளையும் சமாளித்து வருடக்கணக்காக அமைதியாக வேலை செய்த போதிலும் இனவாதம் என முத்திரை குத்தப்படுவதால் அவர்கள் வெறுப்படைந்திருந்தார்கள். மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகம் ஒரு உணர்வில் அவர்கள் கடந்த கால தவறுகளை உணர்ந்து நல்ல, சட்டத்தை மதித்து நடக்கும் இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள பிரஜைகள் என்பதையும் மற்றும் ஐக்கியமான மற்றும் அமைதியான ஸ்ரீலங்காவுக்குள் முன்னோக்கி நகரத் தயாராக உள்ளதை நிரூபிக்கவேண்டும் என எதிர்பார்க்கும் சமயத்தில் இது நடைபெற்றதால் வெறுப்பு உண்டானது. முன்னேறிச் செல்வது இலகுவில் எட்டமுடியாதது என்று உணர்ந்ததினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தமிழ் சமூகம் இந்த நேரத்தில் அதற்கு தயாராக இல்லாமல்கூட இருக்கலாம் மற்றும் உண்மையில் இது எப்படி நடக்கும் என்பதைப்பற்றி அவர்களுக்கு சொந்தக் கருத்துக்கள் இருக்கலாம்.
நிச்சயமாக தமிழ்தேசியவாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரோடு உள்ளது என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையில் வேறுபாடு மற்றும் அதிருப்தி என்பனவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் அதிக சகிப்புத்தன்மை இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இதை நான் முதல் கையாக 2014ல் அனுபவப்பட்டுள்ளேன்,
கலாநிதி ராஜன் கூலின் நூலான விழுந்த பனை வெளியீட்டு நிகழ்வின்போது நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்தேன், பல்கலைக்கழக நிருவாகம் ஆரம்பத்தில் புத்தக வெளியீடு பல்கலைக் கழகத்திற்குள் நடப்பதற்கு அனுமதி மறுத்திருந்தது. ஆனால் தேசியவாதத்தின் மிகை அல்லது வேறுபாடு மற்றும் அதிருப்தி என்பனவற்றில் சகிப்புத்தன்மை இல்லாத நிலை யாழ்ப்பாணத்துக்கு மட்டும் தனித்தன்மையானது என்று நாம் பாசாங்கு பண்ணத்தேவையில்லை. ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னர் புகழ் பெற்ற பேராதெனிய சரத்சந்திர திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற ஒரு நாடகத்தையிட்டு மாணவர்கள் கோபத்துடன் மற்றும் ஆம் வன்முறையாக நடந்து கொண்டார்கள், ஏனெனில் அந்த நாடகம் கலாச்சார ரீதியாகவும் மற்றம் ஒழுக்க ரீதியாகவும் பொருத்தமற்றது என்று அவர்கள் வெளிப்படையாக உணர்ந்தார்கள்.
நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் முதல் வருட மாணவர்களுக்கு அவர்களது சிரேட்ட மாணவர்களால் ஒரு ஆடையணியும் நெறிமுறை பகிடிவதையின் ஒரு பகுதியாகத் திணிக்கப் படுகிறது, அதைப்பற்றி ஒருவர் அனுமானிப்பது குழுக்களின் மதிப்பின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு போதிக்கும் ஒரு முயற்சிதான் அது என்று. எங்கள் பல்கலைக்கழகங்கள் சகிப்புத்தன்மைக்கான இடங்கள், பகிர்தல், சுதந்திரம் மற்றும் முதிர்ச்சி என்பனவற்றின் அடிப்படையில் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டி உள்ளது. அத்தகைய மதிப்புகளை நாங்கள் கோருவதற்கு முன்பு எங்கள் சமூகமும் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டி உள்ளது. தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதுக்காக( அது சொர்க்கத்திலிருந்து தடை செய்யப்பட்டது) பெரிய சீற்றம் எழுந்து இன்னும் அதிக காலம் ஆகவில்லை. அழுத்கம கலவரங்கள் மீண்டும் திரும்பும் என பொதுபலசேனா அச்சுறுத்தல் விடுத்து அதிக காலம் ஆகிவிடவில்லை. எனவே சிறிதளவு முன்னோக்குடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவம்பற்றி நாங்கள் கண்டனம் தெரிவிக்கும் முன்னர் நீதி உணர்வோடு; எங்கள் தொனியை சற்றுக் குறைத்துக் கொள்வோம்.
இருப்பினும் இந்த சம்பவத்துக்கு எங்களது தீவிர கவனம் அவசியம், ஏனென்றால் குணமாக்கும் பாதை மற்றும் நல்லிணக்கம் என்பன எவ்வளவு கடினமானது என்பதை அது எங்களுக்கு நினைவூட்டுகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற ஒரு போரின் பின்னர் எழுச்சி பெறும் ஒரு சமூகம். எங்கள் சமூகங்களுக்கு பயங்கரமான விடயங்கள் நடந்தேறியுள்ளன. நாங்கள் ஒருவருக்கொருவர் வாய்திறந்து சொல்லமுடியாத விடயங்களைச் செய்துள்ளோம். இந்த விடயங்களை இலகுவில் மறந்துவிடவோ அல்லது சாதாரணமாக முன்னேறிச் செல்லவோ முடியாது. முந்தைய அரசாங்கம் உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் என்று கற்னை செய்தது மற்றும் தற்போதைய அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என யோசிக்கிறது. நல்லிணக்கம் ஒரு கடினமான பணி. அது எங்கள் வேற்றுமைகளைக் கொண்டாடுவதோ அல்லது எங்கள் ஒற்றுமைகளைப் பகிர்வதோ அல்ல. அது எங்களை  நாங்களே ஆழமாக பார்ப்பதுடன்; மற்றும் ஒவ்வொருவரும் மற்றவரிடம் விரும்பாத விஷயங்களிலும் தங்கியுள்ளது, எங்கள் சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களின் அம்சங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாம் சிரமப்படுகிறோம் இருந்தும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். சமூகங்களிடையே அடுக்கடுக்கான கோபங்கள் மற்றும் சீற்றங்கள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதில்தான் அது தங்கியுள்ளது. நல்லிணக்கம் எளிதாக வரப்போவதில்லை, நம்பிக்கையை எளிதாக வெல்ல முடியாது.
எனவே இந்த சம்பவத்துக்கு நாங்கள் எப்படி பதிலளிக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது, போருக்குப்பின்னான இன உறவுகளில் இது ஒரு முக்கிய திருப்புமுனை. சில குழுக்கள் ஏற்கனவே செய்வதைப்போல பயங்கரவாதம், பிரிவினை, காட்டிக்கொடுப்பு என்பன பற்றிய புளித்துப்போன பழைய சுலோகங்களை நாங்கள் மீண்டும் பயன்படுத்தப் போகிறோமா அல்லது பத்து வருடங்களுக்கு குறைவான காலத்துக்கு முன்பு தீவிர எழுச்சியுற்ற போர் மற்றும் வன்முறையான வருடங்களைக் குணப்படுத்துவதற்காக உண்மையில் நாங்கள் செய்து வருவதை மீள்மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப் போகிறோமா?

-ஹரிணி அமரசூரிய-

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment