26 July 2016

மாணவர்கள் மோதல் ஒரு பைத்தியக்காரத்தனம்

கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த சிங்கள – தமிழ் மாணவர்களின் மோதலைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது அது ஒரு பைத்தியக்காரத் தனம் என்பது புலப்படும். இவை யாவும் ஒரு பீடத்திற்கு கல்வி கற்கவரும் புதிய மாணவர்களை வரவேற்கும் ஒரு போலித்தனத்தைப் பற்றியது. மேற்கூறிய பீடம் கலைகளுக்கானதோ உடல் வலிமைகளுக்கானதோ அல்ல ஆனால் விஞ்ஞ}னத்துக்குரியது. ஆனால் மோதல் நடந்ததோ மேம்போக்காக  தவில் மற்றும் நாதஸ்வர இசை மற்றும் கண்டியன் வகை கலாச்சார நடனம் சம்பந்தப்பட்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பீடத்தின் கை நூலில் கடந்த வருடம் உப வேந்தர் பிரகடனப் படுத்தியிருப்பது,
“ விஞ்ஞ}ன பீடத்திற்கு வருகை தந்துள்ள புதியவர்கள், தங்கள் இளநிலை பாடத்திட்டத்தை இத்தகைய நல்ல மதிப்புள்ள பீடத்தில் தொடருவதால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே நான் கருதுகிறேன். கடந்த நாற்பது வருட காலமாக ஆயிரக்கணக்கான விஞ்ஞ}ன பட்டதாரிகள் இந்த விஞ்ஞ}ன பீடத்தின் வாயில் வழியாக வெளியேறி சமூகத்துக்கும் மற்றும் இந்த நாட்டுக்கும் திறமையான கல்வியாளர்களாக, விஞ்ஞ}னிகளாக, நிருவாகிகளாக, ஆசிரியர்களாக மற்றும் மென்பொருள் பொறியியலாளர்களாக சேவையாற்றி வருகிறார்கள்”
வெளிப்படையாக புதியவர்கள் இந்த கூச்சல் குழப்பத்துடனான வன்முறையில் ஈடுபடவில்லை, ஆனால் இதில் ஈடுபட்டது அவர்களின் மதிப்பிற்குரிய சிரேட்ட மாணவர்கள். உப வேந்தரின் கூற்றுப்படி இந்த நபர்கள்தான் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களாக, நிருவாகிகளாக, ஆசிரியர்களாக மற்றும் மென்பொருள் பொறியியலாளர்களாக வரப் போகிறவர்கள். மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இந்த குழப்பங்களின்போது எடுத்த படங்களை நீங்கள் பார்த்தால், தமிழரில் இருந்து சிங்களவர்களை வேறுபிரித்து அடையாளம் காண முடியாது. இந்த  பீடத்தில் நடந்த கலவரத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ மட்டும் நான் விமர்சிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக இந்த சூழ்நிலைதான் நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்த பைத்தியக்காரத்தனமான வன்முறை மோதல் ஸ்ரீலங்காவுக்கு மட்டும் அசாரணமான ஒன்றல்ல, ஆனால் பொதுவாக பல நாடுகளும்  சம்பந்தப்பட்டு உணரப்பட்ட பல வகையான  உண்மையான மோதல்களும் உள்ளன.
யாழ்ப்பாண சம்பவம் நடந்த 14ந்திகதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பிரான்சின் நீஸ் நகரில் முகமட் பூலோ செய்ததை பாருங்கள். அவன் தனது விநியோக பார ஊhதியை வேகமாகச் செலுத்தி அப்பாவியான பார்வையாளர்கள் மீது மோதி 10 குழந்தைகள் உட்பட 84 பேர்களை கொன்று குவித்துள்ளான்.  ‘விரக்தி – ஆக்கிரமிப்பு கொள்கைகள்’ பைத்தியக்காரத்தனமான வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது. என்னதான் குறைபாடுகள் இருந்தாலும்,குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு தங்கள் சர்ச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஜனநாயக வழிகளும் மற்றும் முறைகளும் உள்ளன. அவற்றில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மேம்படுத்துவது எங்கள் சொந்தக் கடமை.
ஆபத்து
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிகவும் எச்சரிக்கையானதும் மற்றும் ஆபத்தானதுமான இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவது, பல்கலைக்கழக பகிடிவதை அல்லது குழு வன்முறை போன்ற பல அத்தியாயங்களில் இடம்பெற்ற இளம்பருவ பைத்தியக்கரத்தனத்தை மட்டும் அல்ல, ஆனால் இன்னும் அதிகம்; சாத்தியமான எதிர்கால பின்விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. (இந்த மோதல் கற்களையும் மற்றும் பொல்லுகளையும் கொண்டு (கற்காலத்தில் நடந்தது போல) போலித்தனமாக இந்த நாட்டிலுள்ள சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் என்கிற இரண்டு பிரதான மனித சமூகங்களுக்கும் சொந்தமான மில்லியன் கணக்கான சமாதானத்தை நேசிக்கும் மக்களின் சார்பாக நடத்தப்பட்டது.
கடந்த வருடம் விஞ்ஞ}ன பீடத்தின் பீடாதிபதி என்கிற வகையில் புதிய மாணவர்களுக்கு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தமிழர்களைப் பற்றியோ அல்லது சிங்களவர்களைப் பற்றியோ பேசவில்லை. இந்த மனிதர்களை “எனது பிரியமான மாணவர்களே” என்று வலியுறுத்தி அவர் உரையாற்றும்போது, அவர் சொன்னது “நாங்கள் மனிதப் பிறவிகள் மற்றும் எங்கள் அறிவுத்தாகம்  எங்களுடன் பிறப்பால் இணைந்தது. இது தொடர்பாக அறிவை வளர்ப்பது அடிப்படையானதும் மற்றும் பிரயோக விஞ்ஞ}னம் மூலாதாரமானதும் ஆகும். விஞ்ஞ}ன பீடமானது உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்யவும் மற்றும் உங்களை கற்றல் மற்றும் ஆய்வுகளில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு தகுதியான பட்டதாரியாகவும் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்வை வழங்கத் தகுதியானவர்களாகவும் மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் தயாராக உள்ளது”
நான் ஒரு குழுவினருக்கு எதிராக மற்றைய குழுவினரை கண்டிக்கவில்லை. தேவையற்ற மோதல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றுக்கு பொறுப்பாக இருந்ததுக்காக இரண்டு குழவினருமே சமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மறுபக்கத்தில் அவர்கள் நியாயமாக வருத்தப்பட்டு, மன்னிப்புக்கோரினால்; இரண்டு குழுவினரையுமே, மன்னித்துவிடலாம், மற்றும் அதிர்ஷ்டவசமாக சமரசத்துக்கு இந்த சம்பவத்தில் சிறிய பாத்திரமே உள்ளது. உள்ளபடியே இங்கு கண்டிக்கவேண்டியது சர்ச்சையை அல்ல, அனால் வழக்கமான ஒரு செயல்முறையை மேற்கொள்வது அல்லது வன்முறையில் ஈடுபடாமல் இருப்பது சர்ச்சையை தீர்த்துவிடாது. இருப்பினும் சர்ச்சைகள் வாழ்க்கையில் இயல்பான ஒரு பகுதி, அவற்றில் பெரும்பாலானவற்றை பற்றி சிந்தித்துப்பார்த்தால், உண்மையானவற்றைக் காட்டிலும் அவை உருவாக்கப் படுவதாலேயே அதிகம் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த உருவாக்கங்களின் பின்னணியில் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள்தான் குற்றவாளிகளாக உள்ளார்கள், இந்த மோதல்களைப் பயன்படுத்தி அவர்கள் செழித்து வளருகிறார்கள் அல்லது செழித்து வளர முயற்சிக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் முடிவில் அவர்கள் தோற்றுப் போய்விடுகிறார்கள். கடந்த வார இறுதியில் நடைபெற்ற சம்பவத்தின் உண்மையான ஆபத்து இதுதான். அந்தச் சம்பவத்தின் பின்னர் இரு தரப்பையும் சேர்ந்த தீவிரவாத அரசியல்வாதிகளும் மற்றும் தீவிரவாத ஊடக வெளியீடுகள் மற்றும் செய்திச் சேவைகள் என்பன சமாதானப் படுத்துவதற்காக அல்லாது முரண்பாடுகளை பெரிது படுத்துவதற்காக மேலதிக நேர வேலை செய்தன. மாணவர்களை விட இவைகளைத்தான் அதிகம் கண்டிக்க வேண்டும்.
பிணக்குகளில் உள்ள பிரச்சினைகள்
நாடு எதிர்நோக்கும் பலவிதமான சவால்களுக்கு அச்சாணியான பிரச்சினைகள் அல்லது நல்லிணக்கம் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகள் என்பனவற்றுடன்  ஒப்பிடும்போது இந்த உடனடி சர்ச்சை அற்பமான ஒன்றாகவே தோன்றுகிறது. ஒரு பிரதான சவால், மொழியாகவே தெரிகிறது மற்றும் அதன்படி தொடர்பாடல்கள்  மற்றும் கலாச்சாரத் தடைகள் உண்டாகின்றன. அதுகூட ஒரு பிரதான பிரச்சினையாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஆங்கில மொழி மூலமே கல்வி கற்கிறார்கள். இப்போது கடந்த ஐந்து வருட காலமாக சிங்கள் மற்றும் தமிழ் (முஸ்லிம்களும் கூட) மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கல்வி கற்று வருகிறார்கள். அங்கு ஏதாவது காதல் விவகாரங்கள் (நான் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே உள்ளதைக் குறிப்பிடுகிறேன்) வேற்று இனத் திருமணங்களுக்கு வழி வகுத்திருக்குமோ என நான் ஆச்சரியப்படுகிறேன்.
சிலர் குறிப்பிடுவதின்படி கண்டிய நடனத்தை வரவேற்பு ஊர்வலத்தில் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள் கடைசி நிமிடத்தில் விடப்பட்டிருந்தால் அப்போ சிங்கள மாணவர்கள் அந்த தயக்கத்தையோ அல்லது மறுப்பையோ புரிந்துகொண்டு, உட்புகுத்தப் பட்டதின்படி அது புதிய மாணவர்கள் அரங்கத்திற்குள் வந்ததின் பின்னர் மேடையில் அது இடம்பெறுவதுடன் திருப்தி அடைந்திருக்கலாம். இந்த வருட வரவேற்பு வைபவத்தில் தவில் மற்றும் நாதஸ்வரம் என்பன புதிய வரவுகள், அப்போ சிங்கள மாணவாகள் தங்கள் நடனம் சேர்க்கப் படாததையிட்டு ஆத்திரம் அடைவது இயல்பானதுகூட. ஒருவேளை இந்த புதிய உட்புகுத்தல்கூட தமிழ் மாணவர்களின் கலாச்சார வலியுறுத்தலாகவும் இருக்கலாம், ஏனென்றால் சிங்கள மாணவர்கள் வெசாக் மற்றும் பொசன் விழாக்களில் மட்டும் அன்றி சிங்கள தமிழ் புதுவருடப் பிறப்பையும் சிங்களப்பாணியில் கொண்டாடுவதை அவர்கள் பார்த்ததினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம்.
சமீப காலங்களில் சில சுவராஸ்யமான கலாச்சாரப் போட்டி இரு குழுக்கள் இடையேயும் நடப்பது போலத் தெரிகிறது. இதனால்தான் அறிவியல் மாணவர்கள் அறிவற்ற விதமாக நடந்துள்ளார்கள். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு 2013ல் அவர்கள்  தமிழ் அல்லது சிங்களக் கலாச்சாரத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு ஜோடி நடனத்தைக் கூட இந்த வரவேற்பு வைபவத்தில் புது மாணவர்களுக்காக வைத்திருந்தார்கள். ஆனால் யார் இந்த ஆக்கிரமிப்பை முதலில் ஆரம்பித்தார்கள் என்பது ஒரு வகை கோழியா அல்லது முட்டையா முதல் வந்தது போன்ற ஒரு பிரச்சினை. அது ஒரு துரதிருஸ்டமான சம்பவம் ஏனென்றால் கலாச்சாரம் என்பது குறிப்பாக ஸ்ரீலங்கா பின்னணியில் மொழியுடன் ஒப்பிடுகையில் ஒரு இணைப்புக் காரணி. ஒருவேளை சிங்கள மாணவர்கள் அல்லது மற்றவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பணி என்னவென்பதை முற்றாகத் தெரியாதவர்களாக இருக்கலாம். அறிவிப்பு சொல்வது அதன் பணி:
“அறிவார்ந்த,தொழில் திறன் மிக்க திறமையும் மற்றும் தகுதியும் வாய்ந்த பட்டதாரிகளை, தேசிய மற்றும் சர்வதேச சமூகங்களின் வளர்ந்துவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் மற்றும் ஸ்ரீலங்காவின் வட பகுதியின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார தேவைகளைகளின் விசேட முக்கியத்துவத்துக்காகவும் தயாரிப்பது”
பரந்த சூழல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரிணாமத்தை இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நுணுகி ஆராயக்கூடியதாக உள்ளது. முதலாவது (எங்கள் மூத்த நண்பர்) காலஞ்சென்ற பேராசிரியர் கே.கைலாசபதி உப வேந்தராக இருந்ததும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாகவும் 1974ல் பிறப்பெடுத்த காலம். அவர் இலட்சியம்,மதிப்பு, மனிதத்தன்மை நிறைந்த சிறந்த கல்வியாளர். அவரது காலத்தில் அந்தப் பல்கலைக்கழகம் சிங்களவர்கள் அதேபோல முஸ்லிம்கள் யாழ்ப்பாணக் கலாச்சாரத்துக்கு ஆழமான மரியாதை செலுத்தும் ஒரு பல்லினக் கலாச்சார மையமாக விளங்கியது.
அதன்பின் 1979ல் இரண்டாவது கட்டம், அங்கு சுயாதீன பல்கலைக்கழகங்கள் பழையபடி திரும்பவும் நாட்டில் உருவாக்கப்பட்டன மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம், பல்கலைக்கழகச் சட்டத்தின்(1978) கீழ் சுயாட்சி கொண்டதாக உருவானது. இது 1977ல் தமிழ் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையின் பின்னர் ஏற்பட்டது, வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் பற்றி பேசவேண்டியதில்லை, மற்றும் மீளமைப்பின் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியத்தின் ஒரு தெளிவான முத்திரை இருந்தது. மேலே குறிப்பிட்ட பணி பற்றிய அறிக்கைக்கு அப்பால், யாழ்ப்பாண இராச்சியத்தின் சின்னமான நந்தி பல்கலைக்கழகத்தின் சின்னமாக மாறியதுடன் அதன் கொடியின்; மத்தியிலும் இடம் பிடித்தது. இது அசாதாரணமான ஒன்றல்ல தெற்கில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் சிங்கத்தையோ (உதாரணம்: பேராதனை) அல்லது பௌத்த அடையாளங்களையோ தங்கள் சின்னமாக வைத்துள்ளன.
ஒருவேளை மூன்றாவது கட்டம், சிங்கள மாணவர்களை திரும்பவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துத்துக்கு அனுப்புவதின் மூலம் 2009 போரின் முடிவின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது, தவிரவும் ஏனோ தானோவென்றும் அதிகம் திட்டமிடாமலும் அல்லது தேவையான உகந்த நிலையை ஏற்படுத்தாமலும் இது மேற்கொள்ளப்பட்டது. மறுபுறத்தில் நான் அறிந்தவரையில் கல்விசார் ஊழியர் மத்தியில் குறிப்பாக விஞ்ஞ}ன பீடத்தில் உள்ளவர்களிடையே சிங்கள மாணவர்களை வரவேற்பதில் அதிகம் நல்லெண்ணம் காணப்பட்டது. எனினும் வெளிப்படையாக ஏனைய பீடங்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் மத்தியில் விடயம் இவ்வாறாக இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 60 விகிதமான சிங்கள மாணவர்கள் இந்த பீடத்தில் இருப்பது சந்தேகமின்றி அடக்கியாள்வதும் மற்றும் பிரச்சினைகளை வலிய வரவேற்பதும் ஆகவே இருக்கும்.
தெற்கில் உள்ள ஏனைய பல்கலைக்கழங்களில் தமிழ் மாணவாகள் உள்ளார்கள், ஆனால் நான் அறிந்தவரையில் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும்போது எவ்வித வெறுப்பும் இடம்பெறுவதில்லை. இதற்கான பிரதான காரணம் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்தும்போது ஒருவேளை இது தனி உரிமை என்று பிரச்சினை எழுப்பாததுதான். எனினும் பிரதான நிகழ்வுகளில் தமிழ் அல்லது முஸ்லிம் கலாச்சார நிகழ்வுகள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. வண.கலகந்த தம்மானந்த தேரர் சரியாக விளக்கியிருப்பதின்படி “ எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அந்தப் பல்கலைக்கழகத்துக்குரிய கலாச்சாரப் பின்னணிக்கு எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும்” (கொழும்பு ரெலிகிராப், ஜூலை 22) இது மேலும் தெரியப்படுத்துவது உரிமைகள் கோரப்பட வேண்டியது அல்லது எழுப்ப படவேண்டியது ஒரு பொறுப்பான தன்மையில்தான் என்று, அல்லது அவை தேவையில்லாத மோதல்களுக்கு வழி வகுக்கும். கலாச்சார உரிமைகள் இயல்பாகவே உணர்வுபூர்வமான பிரச்சினைகள் தான். இப்படிச் சொல்வதினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலோ பல்லினக்கலாச்சாரம் நிகழக்கூடாது என்று அர்த்தமாகாது. குறிப்பாக நீண்டகாலம் இழுபட்ட ஒரு போருக்குப் பின்னர் அனைத்து துறையினரும் இந்த நடவடிக்கைகளில் அதிகளவு பொறுப்புடன் செயற்படவேண்டியது ஒரு நடைமுறை. யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தில் வெளிப்படையாக கண்டிக்கப்பட வேண்டியது சர்ச்சையை அல்ல (என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும்), ஆனால் வன்முறையையும் மற்றும் மோதலையும்தான்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி- தேனீ

No comments:

Post a Comment