28 November 2016

பிடல் மானிட விடுதலை வரலாற்றின் அழுத்தமான குறியீடு

எம்காலத்தின் நாயகன் பிடல். பிடல் காலத்தில் நாமும் வாழந்தோம் என்பது எமக் கொரு பெருமிதத்தை தருகிறது.
மார்க்ஸ் மரணித்த போது இரங்லுரையாற்றிய ஏங்கல்ஸ் எம்காலத்தின் மாபெரும் சிந்தனையாளன் தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான் என்று  குறிப்பிட்டார்.
தற்போது மார்க்சிய வழி சிந்தனையாளன் செயற்பாட்டாளன் தனது சிந்தனையையும் செயற்பாட்டையும் நிறுத்திக் கொண்டான்.
உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின நம்பிக்கை நடசத்திரம் பிடல்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேசியம் அந்த மகத்தான உள்ளத்திலே குடி கொண்டிருந்தது.
அமெரிக்காவின் அருகிருக்கும் கியூபா என்ற அந்த தீவு உலகத்திற்கு ஒடுக்கப்பட்ட தேச மக்களுக்கு விடுதலை என்ற செய்தியை சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த கியூபா பிரசவித்த மகத்தான ஆழுமை.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டபலர் நாளடைவில் உள்ளம் சிதைந்து போனார்கள்.
பிடல் விதிவிலக்கு. புரட்சியில் பங்கெடுத்த நாளில் இருந்து அதே உன்னதமான கனவுகளுடன் தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர் .
 அந்த ஆளுமை இலத்தீன் அமெரிக்கர்களை மாத்திரமல்ல. 5 கண்டங்களையும் ஆகர்சித்தது.
 பஞ்சமும் நோயும் பாழ்பட்டு வறுமை மிஞ்சிய மக்களுக்கெல்லாம் அவர் நம்பிக்கை நட்சத்திரம்.
நீதியான உலகினைப் படைக்கமுடியும் என்பதை இறுதி மூச்சுவரை நிலைநாட்ட முயன்றவர். உலகின் பல தேசங்களில் விடியல் கீதங்களை இசைக்கப் பங்களித்தவர்.
மூன்றாம் உலகின் உண்மையான தலை சிறந்த நண்பன் தோழன். 1950களின் முற்பகுதியில் கொடுங்கோலன் பட்டிஸ்டாவின் மன்காடா இராணுவ முகாம் தாக்குதலில் கைது செய்யப்பட்ட பிடல் இராணுவ நீதிமன்றத்தில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்”; என்ற புகழ்பூத்த உரையை ஆற்றினார்.
அது மாநிட நேயத்தின் பிரகடனம். நாம் யாருடைய விடுதலைக்காகப்போராடுகிறோம் எத்தனை கனவுகள் எம்முள் எழுந்தன என்று உலகமாநிட மனச்சாட்சியை தொடும்படியாக உரையாற்றனார்.
அன்றைய அணிசேரா நாடுகளாகட்டும், அங்கோலா நமீபியாவின் விடுதலையாகட்டும், தென்னாபிரிக்க தேசிய விடுதலைப்போராட்டமாகட்டும் பிடலின் கியூபாவின் அழுத்தமான பிரசன்னம் இருந்தது.
யுக புருசன்
தனது இறுதி நாட்கள் வரை சாதாரண மக்களின அதிகாரம் பற்றிய தனது நம்பிக்கைகளை கைவிடவில்லை.
அமெரிக்காவின் படலையில் சாமானியர்களின் அதிகாரத்தை நிலை நாட்டியவர்.
லத்தீன் அமெரிக்காவின் விடிவெள்ளியாக எழுந்தவர்.
நூற்றுக்கணக்கான படுகொலை சதிகளில் இருந்த தப்பித்தவர்.
எண்ணற்ற பொருளாதார தடைகள் மத்தியில் கியூபாவை- லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளை கம்பீரமாக எழுந்து நிற்கச் செய்தவர்.
கல்வி வைத்திய துறைகளில் மாபெரும் மறுமலர்ச்சி பிடலி;ன் கியூபாவில் ;நிகழ்ந்தது.
இந்த மறுமலர்ச்சி கியூபாவுடன் நிற்கவில்லை .  பாழ் பட்டுவறுமை மிஞசிய உலக மானிடத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
பயங்கர நோய்கள் ,பெரு வெள்ளம் யுத்தப் பேரழிவுகள் நிகழ்ந்த இடங்களுக்கெல்லாம் கியூபாவின் வைத்திய சேவை கிடைத்தது. இறுதியாக எபோலா தாக்கிய மேற்கு ஆபிரிக்கரிவற்கு கியூப மருத்துவக் குழு உடனடியாக விரைந்தது.
பொருளாதார தடைகள் எத்தனையோ ஏகாதிபத்திய கெடுபிடிகள் மத்தியில் கியூபா கைமாறு கருதாது தனது சர்வதேச சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தியது.
அங்கோலா நமீபியா தென்னாபிரிக்க விடுதலைக்கு கியூபா தோள் கொடுத்தது.
மண்டெலா கொடுஞ்சிறையில் இருந்தபோது வின்னி மண்டெலா ஊடாக விருது வழங்கி கௌரவித்தது.
நிறவெறி காலனி ஆதிக்கம் ஏகாதிபத்திய சுரண்டல் சூறையாடல் இவற்றுக்கெதிராக உறுதியா நின்றது கியூபா.
அமெரிக்காவால் 1960களின் முற்பகுதியில் தொடுக்கப்பட்ட பன்றி வளைகுடா நெருக்கடி மற்றும் 1962 இல் அணுவாயுத யுத்தம் மூழலாம் என்று கருதப்பட்ட ஏவுகணை நெருக்கடி எல்லாவற்றையும் தாண்டியது பிடலின் கியூபா
உலகின் பொதுவுடைமை முகாம் நேருவின் தலைமையிலான இந்தியா சுகர்ணோவின் தலைமையிலான இந்தோனேசியா உட்பட சோசலிச சமூக ஜனநாயக உலகின் உயிhத்துடிப்புள்ள நண்பனாக தன்ளை வரிந்து கொண்டது 1959 புரட்சியின் பின்னான கியூபா.
சே இந்த நாடுகளுக்கெல்லாம் நட்புறவுப் பயணம் மேற் கொண்டார். அணிசேரா இயக்கதின் நிகரற்ற நண்பர்  .உற்சாகமான பங்காளர்
லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளின் மூலவிசை பிடல்.
கருத்துவேறுபாடுகளையும் நாகரிகமான முறையில் எதிர் கொள்பவர்.
அவருடைய முகம் குரல் இறுகியதாக இருப்பதில்லை.
அவருடைய பேச்சாற்றல் பிரமிக்கவைப்பது.
இலத்தீன் அமெரிக்காக்ளை கிளர்ச்சி கொள்ளவைப்பது.
அவருது ஐ. நா உரையொன்று மிகப்பிரபலமானது. 4 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதுவரை அவவளவு நேரத்திற்கு யாரும் உரையாற்றவில்லை.
1990 சோவியத் உடைவிற்கு பின்னும் சோசலிசப்பதாகையை உயர்த்தியபடி அந்த சின்னஞ்சிறு தீவு நிமிர்ந்து நின்றது.
அமெரிக்காவை கதரினா புயல் தாக்கியபோது கியூபாவில் இருந்து வைத்தியர்களை அனுப்பிவைக்கவா என்று கேட்டவர்.
பாப்பரசரை வரவேற்க அவர் பின் நிற்கவில்லை.
அண்மையில் சரித்திர முக்கியத்துவம் வாயந்த ஒபமாவின் கியூபா பயணம் நிகழ்ந்தது. அமெரிக்க கியூபா இராஜதந்திர உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது .
விடாப்பிடியான கொள்கை உறுதியுடன் அவர் உலகளாவிய உறவுகளைப்பேணினார்
மார்க்சின் கனவுகளின் வாரிசு.
ஒக்டோபர் புரட்சியின் தெடர்ச்சி உறுதுணையாக நின்றது.
சர்வதேசியவாதி.
உலகின் இளம்புரட்சியாளர்களின் உன்னத வழிகாட்டி.
தோழர் பிடலின் நினைவுகள் மனித நேய நெஞ்சங்களில் தலைமுறைகள் தாண்டி நிலைக்கும் .
தோழர் சுகு- ஸ்ரீதரன்

No comments:

Post a Comment