12 June 2017

வெறுப்பு பேச்சு சட்டங்கள்

பெவர்லி ஹேகர்டொன், சீமாட்டிகளே, சீமான்களே:
இந்த ஆகஸ்ட் கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்ததுக்கு பெவர்லிக்கு நன்றி.தேர்தல் அமைப்பின் சர்வதேச ஒன்றியத்தின் (ஐ.எப்.ஈ.எஸ்) ஊடாக எங்கள் அனுசரணையாளர்களாக உள்ள அவுஸ்திரேலியன் எயிட் மற்றும் அமெரிக்கன் எயிட் ஆகியோருக்கும் கூட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் பல செயற்பாடுகளுக்கு ஐ.எப்.ஈ.எஸ் தாராள நன்கொடை காரணமாக உள்ளது. எனவே உங்களுக்கும் உண்மையில் நன்றி.
நான் ஒரு மின்னியல் பொறியியலாளர், 1980 முதல் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் ஒழுங்காக கட்டுரைகள் எழுதி வருகிறேன். டெய்லி நியுஸ் பத்திரிகையில் அர்ஜூன ரணவன என்னுடன் ஒரு ஒப்பந்தத்தை ஆரம்பித்தார். நாட்டு நிலமை சீர்குலைந்தபோது ரணவன அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்டார், அதைத் தொடர்ந்து எனது கடடுரைகளின் பெரிய பந்திகள் வெட்டப்பட்டன, அதனால் நான் த ஐலன்ட், மற்றும் த லீடர் பத்திரிகைகளுக்கு இடம் மாறினேன். அதனால் தேர்தல்கள் பற்றி அறிவிக்கும் உங்கள் குழப்ப நிலையை நான் புரிந்து கொள்கிறேன்.
வெறுப்பு பேச்சு பற்றி நான் சாதாரணமாக சில வரிகள் மட்டும் சொல்ல விரும்புகிறேன் ஏனென்றால் ஊடக நெறிமுறைகள் பற்றி தேர்தல் ஆணையத்தால் பரிசீலிக்கப் படுகின்றன. வெறுப்பு பேச்சுகள் எங்கள் அரசியல் சூழலில் மிகவும் பொதுவானது. நான் சிறுபான்மை கண்ணோட்டத்தில் அது பற்றி கவனம் செலுத்த விரும்புகிறேன். தேர்தலிலோ அல்லது அது இல்லாவிட்டாலோ, ஸ்ரீலங்கா முழுவதும் வெறுப்பு பேச்சுகள் நிறைந்துள்ளன. நாங்கள் குறிப்பாக அவதூறு சட்டங்கள் பற்றி அறியாமையாக இருக்கிறோம் மற்றும் இணைய அடிப்படையிலான கலந்துரையாடல் பக்கங்களை மட்டுமே பார்க்கவேண்டியது அவசியம். மறுபக்கத்தில் இந்தியா ஓரளவு கண்டிப்பானது ஒருவேளை மிகவும் கண்டிப்பானது என்று சொல்லலாம். அவர்களின் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எங்கள் கலாச்சாரத்தை பொறுத்தவரை வெறுப்பு பேச்சு உணர்ச்சியற்ற ஒன்றாக உள்ளது. எங்கள் நாளாந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்துவிட்ட எங்கள் மிதிவண்டியை பழுதுபார்த்தவர் ஒரு ஊமை அல்லது பேச்சுக் குறைபாடு உள்ளவர். அவருக்கு ஒரு பெயர் இருந்தபோதும் அவரை ஊமை என்றே அழைத்தார்கள். நான் ஒருபோதும் அவரது பெயரை அறிந்திருக்கவில்லை. அவரிடம் போகும்போதெல்லாம் ஊமை இருக்கிறாரா? என்றுதான் நாங்கள் கேட்போம். அவரை விளையாட்டாகச் சீண்டிப்பார்க்க நினைக்கும் பையன்கள் வேண்டுமென்றே அவரைக் கோபப் படுத்துவார்கள். அவரால் பேச இயலாது, புரியாத ஒலிகளில் அவர் அந்தப் பையன்களைத் திட்டுவார், அதுதான் அந்தப் பையன்களுக்கும் வேண்டியது. அது வேடிக்கையாக இருக்கும்.
ஒரு பாடசாலையின் தலைமையாசிரியருக்கு சிறுவயதிலேயே போலியோ நோய் தாக்கியிருந்தது, பாடசாலையில் அவரது பட்டப்பெயர் “சொத்திப் பள்ளிக்கூடம்” என்பதாகும். வெகு நாட்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார், ஆனால் அந்தப் பாடசாலை எப்போதாவது அவரை நினைவு கூருகையில் அதிர்ச்சியாக அந்தப் பட்டப்பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறது. நாங்கள் நவீனமானவர்கள் என்று சொல்லி எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்கிறோம் ஆனால் உண்மையில் மிகவும் கொடூரமானவர்களாகவும் மற்றும் பழமை வாதிகளாகவே உள்ளோம். ஊமை மற்றும் சொத்தி என்பதெல்லாம் எங்கள் சாதாரண பேச்சின் பாகமாக உள்ளன. அதேவேளை அவை பரந்த அளவில் எங்கள் பத்திரிகைகளில் இடம் பிடிக்கவில்லை,என்றாலும் பத்திரிகைகளில் வெறுப்புணர்வை தூண்டுவது கடினம் என்பதை நமது சமூகத்தில் உள்ள உறதியான வேர்கள் எடுத்துக் காட்டுகின்றன.
மற்றொரு உதாரணத்தை எடுத்தால், ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரின் மனைவியின் வேட்பாளர் தெரிவு விவாதிக்கப்பட்ட இடத்தில் நான் பிரசன்னமாக இருந்தேன். அந்தப் பெண் தனது அரசியலை கட்சிக்குள் கொண்டுவரலாம் என்கிற ஒரு கவலை எழுந்தது. அதற்கு கிடைத்த பதில் “ கவலை வேண்டாம். நாங்கள் இரண்டு முறை அவரிடம் சத்தம் போட்டால் அவர் அமைதியாகி விடுவார்” என்பதாக இருந்தது. அந்தப் பெண்மணியுடன் பல்வேறு விடயங்களில் நான் மாறுபட்டாலும் கூட இன்று அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாகத் திகழ்கிறார். விடயம் என்னவென்றால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட அந்தப் பெண் அவர்களின் நிலைக்கு வளர்ந்து விட்டார்;.
எனக்கு எதிராக நிறைய வெறுப்பு பேச்சுகள் எழுதப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் உப வேந்தராக இருந்தபோது  எனக்கு எதிராக ‘ஒரு பேப்பர்’ என்பதில் ஒரு மோசமான ஆவணம் வெளியானது அது அவர்களின் ஆங்கிலத்துக்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஆசிரியத் தலையங்கம்.
____________________________________________________________________________________________________
ஒரு பேப்பர்
வெள்ளி, ஏப்ரல் 7, 2006 - 44வது வெளியீடு
ரட்னஜீவன் எச். ஹ_ல் என அழைக்கப்படும் இந்த மனிதர் யார்?
அந்த மனிதரைப் பற்றிய  உள்ளிருந்து வெளியிலான ஒரு அறிமுகம்!
தமிழ் கிறீஸ்தவ சமூகம்  விகிதாசாரத்தில் அவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாக தமிழர் பிரச்சினையில் பங்களிப்பு செய்துள்ள அதேவேளை, சிறிய அளவிலான ஒரு சில கிறீஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட மதத்தை தாங்கள் பாழ்படுத்தி விட்டோம் என்கிற உண்மையில் தங்கள் மனங்களை ஒருங்கிணைக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இந்த மனக்குறையை அவர்கள் முழு சமூகத்துக்கும் எதிராகக் கொண்டு செல்கிறார்கள். ஹ_ல் சகோதரர்கள், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் கனடாவை சேர்ந்த டி.பி.எஸ் ஜெயராஜ் ஆகியோர் இந்த வகையைந் சேர்ந்தவர்கள். ரட்னஜீவன் ஹ_லைப் பொறுத்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழக உப வேந்தர் என்கிற வகையில் இவ்வளவே சொல்ல முடியும். இவர் ஒரு ஆபத்தான மனிதர். இவர் யாழ்ப்பாண இந்து சமூகத்தை சுதந்திரமாக அலைந்து திரிய விடமாட்டார், குறிப்பாக யாழப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள், அங்கு ஒரு சைவக் கோவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________________
வெறுப்பு பேச்சுகள், இலக்கு வைக்கப்பட்ட ஒரு குழுவை அவமானப் படுத்தி அச்சுறுத்துவதுடன் அவர்களை அச்சத்திலும் மற்றும் வெட்கத்திலும் வாழும்படி செய்கிறது, தாங்கள் யார் என்பதை மறைக்கும்படி செய்துவிடுகிறது. இந்தப் பொருட்கள் யாவற்றையும் காட்டப்பட்டுள்ள பந்தியில் காணலாம். சிறுபான்மையினருக்கு எதிராக சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்புணர்வை பேசுவதுதான் அவர்களது ஆர்வம். அந்த வெறுப்பு பேச்சு முறையாக புரிந்துகொள்ளப் படவில்லை மற்றும் சிறுபான்மையினருக்கு கூட அந்த வெறுப்பு பேச்சில் மறைந்துள்ள வெறுப்புணர்வை புரிந்து கொள்ள முடியாமலிருக்கும்போது அதைக் குற்றமாக்குவது கடினம். “ஒரு பேப்பர்”கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பனவற்றில் கூட்டாகப் பிரசுரிக்கப் படுகிறது, அங்கெல்லாம் வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. எனினும் அந்தப் பத்திரிகைக்கு எதிராக ஒருபோதும் வழக்குத் தொடரப்படவில்லை. விசேடமாக சிறுபான்மையினர் நிலையை பொறுத்தவரை, இந்த மோசமான முறைக்கு எதிராக புகார் தெரிவிக்க யாருக்குத் தைரியம் உள்ளது?
ஒருபக்கம் வெறுப்பு பேச்சு விவாதங்கள், போட்டியிடும் நெறிகள் என்பன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பாக உள்ளபோது மறுபுறத்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் சிந்தனை என்பன உள்ளன. வெறுப்பு பேச்சு ஆட்கள் அல்லது குழுக்களை அவர்களின் சாதி, மதம், இனவழி, பாலியல் சார்பு, இயலாமை அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கு வைத்து தூண்டிவிடுகிறது. எங்கள் பாராளுமன்றில் 5 விகிதமே பெண்கள் உள்ளபோது பெண் அரசியல்வாதிகள் பற்றி மிகவும் பொதுவாகக் கேள்விப்படுவது என்ன.
சில வேளைகளில் செய்தித்தாள்கள் ஒரு இரட்டை விளையாட்டை விளையாடுகின்றன. உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் ஒரு கருப்பு மனிதன் ஒரு வெள்ளைப் பெண்மீது பாலியல் பலாத்காரம் புரிந்தபோது. அந்த மனிதனின் பெயர் சாதி நடுநிலையாக சாள்ஸ் பிறவுண் என்று இருந்தது. பொதுமக்களுக்கு குற்றம் பரிந்தவன் கறுப்பு இனத்தவன் என்பதை அறியும் உரிமை உள்ளது.  ஆனால் அது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விடலாம். அதற்கு மேலும் அதை வெளிப்படுத்துவதின் மூலம் பிரச்சினையை தூண்டுவதாக மக்கள் செய்தித்தாள்மீது குற்றம் சாட்டலாம். இந்த நிலையில் செய்தித்தாள் என்ன செய்தது? அது சாள்ஸ் பிறவுணின் சாதியை குறிப்பிடவில்லை, மாறாக அவனது புகைப்படத்தை பிரசுரித்தது. இப்போது செய்தித்தாள் பொறுப்பு அறிக்கையை கோரலாம். அந்த செய்தித்தாள் செய்தது சரியா? அல்லது தவறா?
எனினும் ஸ்ரீலங்காவில் ஒருவரின் பெயரைச் சொல்வது மூலம் அவரது இனம் வெளிப்படும்;.நீண்ட காலமாக இருந்து வரும் தமிழ் பெயர்களான ஹ_ல், வாரன், கிங்ஸ்பரி, ஹெம்பில், மான் போன்றவை மூலம் எனது குடும்பம் வழியில் இருந்து நான் ஒரு தமிழ் கிறீஸ்தவன் என்பதை புரிந்துகொள்ள முடியும். குற்றம் புரிந்த அவன் அல்லது அவளை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை விடுத்து அவர்களின் சாதியை பழிக்கும் இந்தப் பிரச்சினைi நாங்கள் எப்படி தீர்த்து வைப்பது?
ஸ்ரீலங்காவில் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியினரின் மேல் இழைக்கப்பட்ட கொடூரமான உபசரிப்பை விபரிப்பதற்கு, அந்தக் கருத்தை நிரூபிப்பதற்காக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னாருக்கு இன்னின்ன நிகழ்வுகள் நடந்தது என்று நாங்கள் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. ஆனால் நாங்கள் அவரின் சாதியை குறிப்பிடாவிட்டால், அங்கு ஒரு சாதி ஒடுக்குமுறை நிகழ்ந்துள்ளது என்பதை நாங்கள் எவ்வாறு காட்டுவது, எவ்வாறு நிரூபிப்பது? கட்சிகள் வேட்பாளரை தெரிவு செய்யும்போது எப்போதும் சாதியை கவனத்தில் கொள்கிறது. அதைப்பற்றி நாங்கள் அறிவிக்கலாமா? இந்தப் பிரச்சினையால் நான் தனிப்பட்ட முறையில் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளேன். ஒடுக்கப்பட்ட ஒரு சாதி அங்கத்தினராக ஒருவரை அடையாளம் காணும் தீமையுடன் ஒப்பிடும்போது அதைவிட ஒடுக்குமுறையே நல்லது என நான் கண்டேன். எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் சிந்திப்பதற்கு இதில் நிறைய இருக்கிறது.
இன்று மதிப்பானதும் பரவலாக வாசிக்கப்படுவதுமான யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி எனும் செய்தித்தாள், அனைத்து தமிழ் கிறீஸ்தவர்களையும் இந்து சமயத்துக்கு மதம் மாறும்படி அழைப்பு விடுத்துள்ளது ஏனென்றால் கிறீஸ்தவம் தமிழர்களுக்கு அந்நியமான ஒன்றாக இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். நல்லை ஆதீனத்தின் பிரதம குரு, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தரை வரவேற்பதற்காக இணுவிலில் நடந்த கூட்டத்தில் அதை இந்துப் பலகலைக்கழகமாக மாற்றும்படி கேட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் அங்கு கிறீஸ்தவர்களுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர்  இந்த கோரமான யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு முதலமைச்சர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கொலை மற்றும் கற்பழிப்புக்கு இந்தியாவில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தான் ஏன் வணங்குகிறேன் என்பதை தற்காப்பதற்காக யேசு கிறீஸ்து கூட ஒரு குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியுள்ளார். ஆனால் யேசு ஒருபோதும் யாரையும் கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ இல்லை. பல செய்தித்தாள்கள் இந்தக் கதைகளை வெளியிடாமல் செய்து இந்த வெறுப்பு பேச்சை ஒடுக்கியதன் மூலம்  பொதுமக்களுக்கு அநீதி செய்துள்ளன.
வெறுப்பு பேச்சு எப்போதும் சிறுபான்மையினரையே கீழிறக்குகிறது என்பதை கவனிக்கவும். ஏனென்றால் பெரும்பான்மையினர் எண்ணிக்கையில் அதிகமாக  உள்ளதினால் அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சிறபான்மையினரிடம் பெரும்பான்மையினருக்கு எதிராக  வெறுப்பு விடயங்களை வெளியிடுவதற்கான துணிவு அரிதாகவே உள்ளது. அவர்கள் அதைச் செய்தால் அவர்கள் துடைத்தழிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் சிறுபான்மையினர் அடிக்கடி வெறுப்பு பேச்சுக்கு இலக்காகிறார்கள். வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டங்கள் ஏதாவது இருந்தால் அது சிறுபான்மையினரை மேம்போக்காக காப்பாற்றுவதாகவே உள்ளன. இருந்தும் வெறுப்பு பேச்சைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு உறுதியாக நான் எதிரானவன். அது ஏன்?
இங்குள்ள சட்ட அமலாக்கத்தை கவனத்தில் கொள்ளுங்கள். அது சாதி நடுநிலையானதல்ல. ஒரு சிறிய விடயமாக எனது அனுபவத்தை பொறுத்தவரை ஏ - 9 வீதியில் வேகத்தை மீறியதற்காக அபராதம் வழங்கும் சீட்டுக்களைப் பாருங்கள், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கே அதிகம் தண்டச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன (குறைந்தது விகிதாச்சாரத்தில்). நான் இந்தப் பாதையால் ஒழுங்காக ஓட்டிச் செல்லப்படுபவன். தமிழ் சாரதிகள் உடனடியாக காரை விட்டு இறங்கி மன்றாடுகிறார்கள். அவர்கள் மடிக்கப்பட்ட சிறிய நூறு ரூபா கட்டு ஒன்றைக் கொடுத்து அதிலிருந்து விடுபடுகிறார்கள். எனது சிங்களச் சாரதி வாகனத்தில் அமர்ந்தபடியே சிரித்தபடி சிங்களத்தில் தேர்தல் ஆணைக்குழு என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்.
அனுராதபுரத்திலிருந்து புத்தளத்துக்கு 14 கி.மீ தொலைவில் வைத்து 60 கி;மீஃமணி வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு காவலர் தனது றடாரில் 72 கி.மீஃமணி காண்பிப்பதாகச் சொல்லி எனக்கு அபராதச் சீட்டு வழங்கினார். நேர்மையற்ற காவல்துறையினரைப் பற்றி நீதிபதியிடம் சொன்னதால் எனக்கு 1100 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் நீதிமன்றத்துக்கும் சிலமுறை விஜயம் செய்யவேண்டி இருந்தது. மரைன் டிரைவ் இலிருந்து காலி வீதிக்கு ஒரு இரவில் வாகனத்தில் சென்றபோது, ஒரு வழிப் பாதை என்கிற  சமிக்ஞை அடையாளம் கீழே விழுந்ததினால் எனக்கு முன்னால் சென்ற தமிழ் சாரதிக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது. எனது சிங்களச் சாரதி அவர்களுடன் பேசி தனது வழியில் வெளியேறினார். இப்படி நான் பார்த்த பல நிகழ்வுகளை உதாரணம் காட்ட முடியும். ஆனால் அது பற்றி நான் நினைப்பதில்லை.
திரும்பவும் வடக்கு கிழக்கில் கொலையாளிகளுக்கு எதிராக வழக்கு தொடரப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நன்கு ஆவணப்படுத்தப்பட்ட நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான விடயங்களைப் பேசிய ஞ}னசார தேரோவை ஒரு அமைச்சர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்பதாக அறியப்படுகிறது, அதேவேளை தாங்கள் அவரைத் தேடிக்கொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நான் வெறுப்பு குற்றத்துக்கு எதிரான சட்டத்தை ஏன் விரும்பவில்லை என்பதை மேலே குறிப்பிட்ட விடயங்கள் விளக்கும். அத்தகைய சட்டங்கள் ஒருபோதும் சிறுபான்மையினரை பாதுகாப்பதில்லை மற்றும் சிலவேளைகளில் சிறுபான்மையினரின் பேச்சு சுதந்திரத்தையும் தடை செய்கிறது. ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றி நான் குரலெழுப்பும் போது, கிடைக்கும் பதில் நான் வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத பிரிவை ஊக்குவிக்கிறேன் என்பதாகும். இதன்படி வெறுப்பு பேச்சுக்கு எதிராக உள்ள சட்டங்கள் நாம் சொல்லும் சிறிய விஷயங்களைக் கூட அடக்கிவிடும்.
மேலும் சட்ட அமலாக்கம் சமச்சீரற்றதாக இருக்கும். நடுநிலையற்ற நீதிபதிகள் கைகளில் இருக்கும் வலுவான சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும். உதாரணம் பைபிள், யேசு கிறீஸ்து சொல்கிறார் “நானே வழியும் சத்தியமும் மற்றும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னூடாக அல்லாமல் வேறு எவரும் பிதாவிடம் வருவதில்லை” என்று. இயேசுவினூடாக அல்லாமல் வேறு எவரும் பிதாவிடம் வருவதில்லை என்கிற கடைசி வரி  வெறுப்புக் குற்றத்திற்காக பைபிளை தடை செய்யலாம் என்று அர்த்தமாகிறது. ஒரு பக்கச் சார்பான நீதிபதியினால் அதுவும் முடியலாம் என நான் நினைக்கிறேன். இதே போன்ற ஒரு சம்பவம் நான் சிங்கப்பூரில் வேலை செய்யும்போது அங்கு ஒரு போதகருக்கு நடந்தது. வெறுப்பு பேச்சு, சிந்தனைச் சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் என்பனவற்றை எப்படி பாதிக்கிறது என்பதை இது தெளிவு படுத்துகிறது
நான் இன்னும் அதிகம் சொல்லத் தேவையில்லை, அல்லது சொல்ல வேண்டுமா?
 நன்றி.

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல்

(நீர்கொழும்பு ஜெட்விங் கடற்கரை விடுதியில் ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், 2 ஜூன் 2017ல் நிகழ்த்திய திறப்பு விழா குறிப்புகள்)

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment