வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வவுனியாவில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆர். நடராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.
குறித்த கலந்துரையாடலில் இப்பிரதேசங்களில் வாழும் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான அநீதிகள் பற்றியும் திட்டமிட்ட ரீதியில் அம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படுவது பற்றியும் அபிவிருத்தி திட்டங்களில் காட்டப்படும் பாரபட்சங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆயிரத்திற்கு சற்று கூடுதலான வாக்குகளை பெற்ற முஸ்லீம் வேட்பாளருக்கு இன நல்லிணக்கத்திற்காக ஜந்து வருடங்கள் முழுமையாக மாகாண சபை உறுப்பினா் பதவி வழங்கிய கூட்டமைப்பினர் மலையக மக்கள் சார்பாக போட்டியிட்டு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற நடராஜானுக்கு ஒரு வருடமும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற ரவிக்கு அதுகூட வழங்கப்படாமல் புறக்கணித்தமை பற்றியும் இங்கு சுட்டி காட்டப்பட்டது.
மேலும் போராட்ட காலங்களில் இம்மக்கள் வடக்கு கிழக்கு தமிழ்மக்களாக ஒருமித்து பார்க்கப்பட்டிருந்தாலும் கூட போராட்டம் முடிந்த தற்போதைய காலகட்டத்தில் பிரதேசவாத போக்குகளினால் அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நோக்கப்படுகிறார்கள் கிளிநொச்சியில் தமிழ்க்கவியின் கட்டுரை வவுனியாவில் பொருளாதார மத்திய நிலைய அமைப்பு இழுபறியின்போது பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் கௌரவ பா.உ ஶ்ரீதரன் அவர்களின் "வடக்கத்தியான்" பேச்சு, கச்சாய் சிவத்தின் உரையாடல் போன்ற நடவடிக்கைளுக்கு தமிழ் தேசியஸகூட்டமைப்பினர் இதுவரை எவ்வித வருத்தத்தையோ அல்லது கண்டனத்தையோ தெரிவிக்காமை பற்றியும் யாழ் இந்திய துணைத்ததூதுவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. எனக் கலந்துகொண்ட வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் பிரதிநிதகள் தெரிவித்தனா்

No comments:
Post a Comment