புத்தள மஹாகொடயாய கிராமத்தில் புலிகளால் ஒன்பது பேர் சுட்டுக்கொலை
மொனராகல மாவட்டம் புத்தள பிரதேசத்திலுள்ள மஹாகொடயாய கிராமத்தில் நேற்றிரவு (12-04-2009) புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட கிராமவாசிகள் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தகவல்களின் படி கொல்லப்பட்டவர்களில் 03 சிறுவர்களும், 03 பெண்களும அடங்குகின்றனர். மேலும் வயோதிப பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வயலில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவருகிறது.
No comments:
Post a Comment