13 April 2009

மோதல் தவிர்ப்பு அறிவிப்பிற்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பாராட்டு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்காலிக மோதல் தவிர்ப்பிற்கான அறிவிப்பை பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன் பாராட்டியுள்ளார். ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்சியில் நேற்று (12.04.2009) இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை புலிகள் யுத்த ஆயுதங்களை போன்று பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் தமிழ் மக்களில் அக்கறை கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த மக்களை விடுவிக்க கோரி ஐநா சபை உட்பட சர்வதேச நாடுகள் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து வரும் இந் நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களும் மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகள் செய்த தவறுகளின் பலன்களையே தற்பொழுது அனுபவித்து வருகின்றனர். தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை புலிகள் தட்டிக்கழித்துள்ளனர்.இருப்பினும் மூன்று தசாப்த காலத்தின் பின்னர் வடக்கு மக்கள் ஜனநாயக காற்றை சுவாசிக்கும் சந்தர்பம் ஒன்று உருவாகி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment