இடம் பெயர்ந்தோர் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவர் - மகிந்த சமரசிங்க
கிழக்கு மாகாணத்தில் 1,87,000; பேர் இடம்பெயர்ந்த மக்களை மோதலின் பின் மீளக்குடியமர்த்திய அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு வன்னியில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் சுமார் 2 இலட்சம் பேரையும் சாத்தியமான அளவுக்கு விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். மோதல் வலயத்திலிருந்து வெளியேறியிருக்கும் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இடம்பெயர்ந்து வருகின்ற மக்களின் நலன்புரி நடவடிக்கைகளில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் இம் மக்களுக்குரிய நிவாரண உதவிகளை செய்வதற்கு சர்வதேச அமைப்புகள் முன்வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டமும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை வன்னிப்பகுதிகளில் இருந்து 1,93,000பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.
No comments:
Post a Comment