புல்மோட்டை ஆஸ்பத்திரியில் காயமடைந்த 523 பேர் அனுமதி
முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நோயாளர்கள் காயமடைந்தவர்கள் என 523 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் கடந்த 23-04-2009 அன்று அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் மரியதாஸ்(48), எனவும் மற்றவர் அடையாளம் தெரியாத பெண் எனவும் அனர்தத முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஈ.ஜி.குணாளன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின்படி மார்ச் 16 - ஏப்ரல் 23 வiர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது. இதேவேளை, வியாழக்கிழமை மாலை கப்பல் மூலம் வந்த முல்லைத்தீவு பொதுமக்களில் 233 பேர் புல்மோட்டை இந்திய கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 502 பேர் பதவியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். 19 பேர் வவுனியா நலன்புரி முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, படகுகள் மூலம் முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு வந்த பொதுமக்களில் 17 பேர் பாரிய காயங்களுக்குள்ளாகியிருந்தனர். பொக்குளிப்பான் நோயினால் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். 55 பேர் வயிற்றோட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது திருமலையிலிருந்து சென்ற வைத்திய குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படகுகள் மூலம் வந்த 1,286 முல்லைத்தீவு பொதுமக்களும் புல்மோட்டை சிங்களப் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கள நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment