வவுணதீவில் ஒருவர் சுட்டுகொலை- மூவர் கடத்தப்பட்டனர்
மட்டு வவுணதீவு பிரதேசத்தில் முல்லாமுனையைச் சேர்ந்த வைரமுத்து ராமச்சந்திரன் (26) என்பவர் தனது சைக்கிளில் வீட்டிலிருந்து பால் கொள்வனவுக்காக சென்று கொண்டிருந்த போது வீதியில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில். கடந்த 16-04-2009 ஆம் திகதி செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த சண்முகராசா கமலானந்தராஜா (25) தனது வீட்டிலிருந்து சகோதரியின் வீட்டுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும், அதேபோல் 18-04-2009 ம் திகதி அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் சமுர்த்தி அதிகாரியாகச் சேவையாற்றிய பொன்னம்பலம் ரவீந்திரன் (35) என்பவர் மகிழூரிலுள்ள அவரது வீட்டுக்கு வாகனத்தில் வந்த சிலரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும், 19-04-2009 ஆம் திகதி செங்கலடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சீனித்தம்பி சந்திரசேகரன் (31) என்பவர் வீட்டுக்கருகில்; நின்றிருந்த வேளை, இனந் தெரியாதவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்கின்றது. இவர்கள் தொடர்பான புகார்கள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பொலிஸ் நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment