காயமடைந்த சுமார் 200 பேரும் 11 சடலங்களும் வவுனியா வைத்தியசாலைக்கு
பாதுகாப்பு வலயத்தின் மாத்தளன் பகுதியிலிருந்து காயமடைந்த 200 பேர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 11 சடலங்களும் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் காயமடைந்த 1220 பேர் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment