இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் நிவாரணம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நேற்றையதினம் வவுனியா ஓமந்தைப் பகுதியை அடைந்த பொதுமக்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினர் உணவுப் பொதிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகள் என்பவனவற்றை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வன்னியிலிருந்து மிகவும் சோர்வடைந்து வந்த அம்மக்களுக்கு அவசரத் தேவையாகவும், அவர்களைத் தெம்பூட்டுவதற்காகவும் உடனடியாக 700 கி. கி ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகளை புளொட் நிவாரணக் குழுவினர் விநியோகித்ததுடன், அவர்களுக்காக 5000; உணவுப் பொதிகளையும் விநியோகித்தனர்
ஏற்கனவே வன்னியில் காயமடைந்து மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தொடர்ச்சியாக புளொட் நிவாரணப் பிரிவினர் பழங்கள், ஊட்டச்சத்து மிக்க பால்மா வகைகள், அறுவைச் சிகிச்சைக்கான துணிவகைகள் என்பவற்றை வைத்தியர்களின் சிபாரிசின்படி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment