இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான கூடாரங்கள்
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நா. வின் அகதிகளுக்கான ஸ்தானிகராலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. அவசர, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அங்கீகரித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர் ஸ்தானிகரான அன்டோனியோ குட்டாரிஸ் தெரிவித்தார்.
அரச தகவலின்படி சுமார் 1,50,000 பேர் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் 38 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் காணபப்டும் நெருக்கடி பாரிய பிரச்சினையாக உள்ளது.குறிப்பாக மெனிக் பாம் முகாமில் 4,5 பேர் பாவிக்கக் கூடிய கூடாரங்களை 8 முதல் 10 பேர் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் பலர் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடாரங்கள் எதுவும் இல்லாதிருக்கின்றார்கள். அரசாங்கம் இவர்களுக்காகப் பொது கட்டிடங்களைத் தந்து உதவவும், காணிகளை ஒதுக்கவும் இணங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment