28 April 2009

கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை அரசு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும்- ஜோன் ஹோம்ஸ்

வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கி யிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டுமென ஐ.நா வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார். மேலும் முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே தான் அஞ்சுவதாகும் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நம்புவதாகவும் தெரிவித்தார்.களத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டியள்ளது. தான் கூறியது போன்று கடைபிடிக்கப்பட்டால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என்றார். வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்கு வந்தவர்களில் மிகுதி எஞ்சியிருப்போர் 20,000 இற்கு குறைவானவர்களே என அரசு தெரிவித்துவரும்வேளை அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50,000 இற்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருப்பதாக ஐ.நா வின் மதிப்பீடு தெரிவித்துள்ளதாக ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை எனவும், அவர்களுடன் நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்றதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment