17 April 2009

450 பேர் கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு

புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐசிஆர்சியின் தகவலின்படி, இதுவரையில் 7500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் காயங்களுக்கு உள்ளாகியவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment