மோதலற்ற பகுதியில் சிக்கியுள்ள 50,000 பொது மக்கள்
வடக்கில் மோதலற்ற பகுதியில் எந்த விதமான மருத்துவ வசதிகளோ சுத்தமான நீர் வசதியோ இல்லாத நிலையில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை அங்கு சிக்கியுள்ள பொது மக்கள் மிகவும் மோசமான சுகாதார நிலைக்கும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகப் பேச்சாளரான சைமன் ஷொரொனோ தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் மோதல்கள் காரணமாக காயமடைந்து, உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் இல்லை. எனினும் கடந்த 48 மணி நேரத்தில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதால். மோதலற்ற பகுதியில் வாழும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் அங்கிருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் சரியான தகவல்கள் எம்மிடம் இல்லை. வெளியேறும் மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்துவது மிகவும் கடினமானது என்றார். ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் 10 ஆயிரம் பேர் இருப்பதாக அறிவதாக குறிப்பிட்டார்மோதலற்ற பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் மேலும் தெற்கு புறமாக நகரத் தொடங்கியுள்ளதாலும் மோதல் தீவிரமாக நடைபெறுவதாலும் மக்களை வெளியேற்றும் எமது நடவடிக்கையை நேற்று முன் தினம் இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று ஒரு படகில் முக்கியமான உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்குப் பகுதிக்குச் சென்றுள்ள மக்களுக்கான மூன்று தொகுதி உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. .
No comments:
Post a Comment