மட்டு. மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் 26,619 வீடுகள் சேதம்
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலை காரனமாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 26,619 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தெரிவித்தார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 4,387 வீடுகளும், வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 7,777 வீடுகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 6,591 வீடுகளும், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 7,864 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றில் இந் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16,884 வீடுகள் முழுமையாகவும், 9,735 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மட்டு மாவட்ட செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment