22 April 2009

யுத்தத்தினால் ஏராளமான சிவிலியன்கள் உயிரிழப்பு : சர்வதேச மன்னிப்புச் சபை

வடக்கே நிலவும் யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உயிரிழப்பதாக சர்வதேச மன்னிப்பச் சபை தெரிவிக்கிறது. அண்மைக்கால மோதல்களால் சுமார் 4500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்று குறித்து கவனம் செலுத்த வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலண்டா பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment