22 April 2009

புலிகளின் பிடியிலிருந்த 63000 க்கும் அதிகமான சிவிலியன்கள் மீட்பு

கடந்த இரு நாட்களாக புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பெருந்தொகையான பொது மக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர். அவ்வாறு இரு தினங்களுக்குள் 62,609 ற்கும் அதிகமான பொது மக்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வந்த பொது மக்களின் எண்ணிக்கை 1,35,000 பேராக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20-04-2009 மாத்திரம் மீட்கப்பட்டவர்களில் 39,081 பேரில் 36,914 பேரை இராணுவத்தினரும், 2,167 பேரை கடற்படையினரும் மீட்டெடுத்ததாக பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment