புலிகளின் தயா மாஸ்டர், ஜோர்ஜ் இருவரும் இராணுவத்தினரிடம் சரண்விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பெறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜோர்ச் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மொழி பெயர்பாளரகவும் செயல்பட்டு வந்தார். இலங்கை அரசாங்கத்துக்கும் எல்ரிரிஈ இனருக்குமிடையில் 2002 ஆண்டு யுத்த நிறுத்தக் காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின் போது இவர் மொழிபெயர்பாளராக செயற்பட்டவராவார்.
No comments:
Post a Comment