இடம்பெயர்ந்த 7000 பேர் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைப்பு
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் 7000 பேர் இடைத்தங்கல் முகாம்களான மனிக்பாம் அருணாச்சலம் நிவாரண கிராமம், புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம், ஆண்டியா புளியங்குளம் வித்தியாலயம் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதைவிட ஓமந்தையிலும், கிளிநொச்சி மற்றும் நிவாரண நிலையங்களிலும் உள்ள சுமார் 50 ஆயிரம் பேரை வவுனியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment