மனிக்பாம் பகுதியில் இடம்பெயர்ந்த 70,000 மக்கள்
வன்னி பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா மனிக்பாம் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சுமார் 70,000 மக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவையான குடிநீர்,சுகாதார வசதிகள்,தங்குமிட வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் அதிகமாக இருப்பதனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் தங்களால் இயன்றளவில் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரிடமிருந்து உணவுப் பொதிகள் பெறப்படுகின்ற அதேவேளை, கொழும்பிலிருந்தும் விமானம் மூலமாகக் கொண்டு வரப்படுகின்ற உணவுப் பொதிகள் ஹெலிகொப்டர்கள் மூலமாக அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment