மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்பது அவர்கள் மீது கவிந்திருக்கும் மனித பேரவலத்திலிருந்து விடுவிப்பது இலங்கை அரசினதும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களினதும் அக்கறைக்குரிய முதன்மையான விடயங்களாகும்.
இந்த மக்கள் மரணத்துடனும், பசி பட்டினியுடனும் போராடிக் கொண்டிருக்கையில் இலங்கையில் ஏனைய பாதுகாப்பான பகுதிகளில் வாழும் நாம் அமைதியாக அமைதியாக இருந்துவிட முடியாது.
இந்த மக்களை பாதுகாப்பதில் சர்வதேச அளவிலும் இந்தியா அளவிலும் உருவாகியிருக்கும் அக்கறைகளை இலங்கையர்கள் புறக்கணித்துவிட முடியாது.
யுத்தநிறுத்தக் காலம் 48 மணி நேரத்துக்கு அப்பால் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் அவசியமற்ற கோரிக்கையல்ல.
இந்த கோரிக்கை விடும் ஐ.நா உட்பட சர்வதேச சமூகமும், இந்தியாவும் புலிகள் மனித கேடயங்களாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று ஒரு தடவை இரு தடவையல்ல பல பத்துத் தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இறுதியாக பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் பலம் பொருந்திய நாடுகளான பிரான்ஸ், பிரிட்டனும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனாலும் புலிகளின் ஆதரவு சக்திகள் புலம் பெயர் நாடுகளில் புலிகளை பிணை எடுப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் நிலையை விட புலிகளின் எதிர்காலம் குறித்தே கவலை கொண்டுள்ளனர்.
எனவே அவர்களின் கோரிக்கைகள் புலிகளின் நலன்களுக்காக மக்களின் நலன்களை பணயம் வைப்பதாகவே அமைகின்றது.
இந்த இடத்தில் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை கருத்திற்கெடுத்து பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படுவதே அர்த்தமுள்ளதும் சமூக நியாயமுள்ள செயற்பாடாகவும் இருக்கும்.
தி . ஸ்ரீதரன்
No comments:
Post a Comment