23 April 2009

பெண்களுக்கு தனிப்பட்ட சுகாதார தேவைகளுக்குரிய பொருட்கள்

வடக்கில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் யுவதிகளுக்கும் தனிப்பட்ட ரீதியிலான சுகாதார தேவைகளுக்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டியிருப்பதாக ஐ.நா. வின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது.

இவர்களுக்கு தேவையான சுகாதாரப் பொதிகளை வழங்குவது தொடர்பாக வவுனியா சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

ஒரு லட்சத்து 29 ஆயிரம் அமெரிக்க டாலர் பெறுமதியான 25ஆயிரம் சுகாதாரப் பொதிகள் ( சவர்க்காரம் ,பற்பசை ,பற் தூரிகை ,உள்ளாடைகள் உட்பட ) கொள்வனவு செய்யப்பட்டு இவற்றில் 13 ஆயிரம்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனை விட பிரசவத்தின் பின்னரான பராமரிப்புத் தேவைகளுக்காக 20 படுக்கைகளும் 60 படுக்கை விரிப்புகளும் வவுனியா பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையொன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா வின் சனத்தொகை நிதியம் இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தினால் நடத்தப்படும் நடமாடும் சேவைகளில் தாய் சேய் நலன் ,குடும்பத்திட்டமிடல் குடும்ப திட்ட ஆலோசனைகள் வழங்கல் ,பாலியல் நோய் தொடர்பான சேவைகள் வழங்குவதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கின்றது-

நன்றி - வீரகேசரி

No comments:

Post a Comment