ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர் குழு இலங்கை வரும் : பான் கீ மூன்
இலங்கையில் வடக்கே போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு ஐ.நா.வின் மனிதாபிமானக் குழு ஒன்றை உடனடியாக அனுப்பி வைப்பதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அங்குள்ள நிலைமைகளை அவதானிப்பதும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், இந்தப் பகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக எவ்வாறான உதவிகளை எம்மால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதும்தான் இவ்வாறு மனிதாபிமானக் குழுவை அனுப்பிவைப்பதன் பிரதான நோக்கமாகுமென ஐ.நா செயலாளர் நாயகம் என பான் கீ மூன் பிரஸ்ஸெல்ஸ் நகரில் இடம்பெற்ற அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
பாதுகாப்பு வலய பகுதிக்கு பணியாளர் குழுவை எவ்வளவு விரைவாக அனுப்பி வைக்க முடியுமோ அவ்வளவு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றார். அதற்கான ஆதரவையும் விரைவான உதவியையும் இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார். ஏற்கனவே ஏராளமான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. இனியும் தாமதிக்கக் கூடாது என்றார்
No comments:
Post a Comment