இடம்பெயர்ந்துள்ள மக்கள் யாழ் குடாவில் தங்க வைப்பு
யாழ். குடா நாட்டில் வன்னி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மக்கள் தென்மராட்சி மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தென்மராட்சியில் உள்ள நாவற்குழி பனை ஆராய்ச்சி நிலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம், மிருசுவில் திருக்குடும்பக் கன்னியர் மடம், கைதடி சைவச் சிறார் இல்லம், கைதடி ஆயுள்வேத வைத்தியசாலை மாணவர் விடுதி என சுமார் 1750 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மக்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் எண்ணிக்கை முகாம்களில் அதிகரித்துள்ளன
தற்போது அழைத்து வரப்படும் மக்கள் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயம், நாவற்குழி பனம் பொருள் ஆராய்சி நிலையம், சாவகச்சேரி மகளிர் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment