இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு பிரான்ஸ் மருத்துவ உதவி
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேறி வடக்கே அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்துள்ள மக்களுக்கு வைத்திய உதவிகளை வழங்க பிரான்ஸ்சும் முன் வந்துள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவ சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த உதவியை வழங்க பிரான்ஸ் முன் வந்துள்ளது. இதன் பிரகாரம் வவுனியாவில் 100 படுக்கைகளைக் கொண்ட வெளிப்புற மருத்துவமனையொன்றை உடனடியாக ஆரம்பிப்தற்கும்,அங்கு சேவையாற்ற 75 பேர் கொண்ட மருத்துவர் குழுவொன்றை அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment