26 April 2009

ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு திடீர் வருகை

இலங்கைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மற்றும் அவசரகால உதவி இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் வட பகுதியில் இடம்பெறும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நிலைமையை நேரில் அவதானிப்பதற்காகவும் இலங்கை அரசாங்கப் பிரமுகர்களை சந்திப்பதற்காகவும் இரு நாட்கள் தங்கியிருப்பார் என ஐ.நா வதிவிட பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் மோதல் வலயத்திற்குள் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதே மிக முன்னுரிமைக்குரிய விடயமாகவுள்ளது என்றும் எனினும் தான் முகாம்களில் உள்ள மக்களை பார்வையிடுவதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை சந்திப்பதற்கும் மோதல் வலயங்களிலிருந்து திடீரென வந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை மீளாய்வு செய்யவும் விரும்புவதாகவும் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளதாக ஐ.நா. அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment