இலங்கை போன்ற நிலவரத்தை கையாள மனிதாபிமான இராஜதந்திரம் தேவை-
வடக்கே தற்போது நிலவும் நிலைமைகள் போன்ற இடர்பாடுகளை சமாளிக்க சர்வதேச அளவில் ஒரு மனிதாபிமான இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவே ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்து உதவிகளை செய்ய முடியும் என்று ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகப் பேச்சாளர் சைமன் ஸ்கனோ பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்தார். தற்போது இலங்கையில் அவ்வகையிலான ஒரு நகர்வின் மூலமே தம்மால் கடந்த பெப்ரவரி மாதம் முதல் காயமடைந்த சுமார் 10,000 பேரை மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து கொண்டுவர முடிந்தது என்றும் கடந்த புதன்கிழமையன்று மோதலற்ற பகுதியிலிருந்து உறவினர்கள் உட்பட காயமடைந்த சுமார் 356 பேர் தமது அமைப்பால் சிகிச்சைக்காக கப்பல் மூலம் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாய்கிழமை இரவு மோதலற்ற பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்காக கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட மூன்று தொகுதி உணவுப் பொருட்களை அங்கு நிலவும் வானிலை காரணமாக இறக்க முடியாமல் இருப்பதாகவும் அதன் பேச்சாளர் சரசி விஜேரட்ண பி.பி.சி க்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment