28 April 2009

வவுனியாவிலுள்ள முகாம்களை பார்வையிட்ட பிரிட்டிஷ் அமைச்சர்

இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரிட்டனின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மைக் பொஸ்ரர், வன்னியிலிருந்து. இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் வவுனியா முகாம்களை பார்வையிட்டார். அதன் பின்னர் கொழும்பு திரும்பிய அவர் இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இருவரையும் சந்தித்து பேசியபோது இலங்கைக்கான உதவிகளை அதிகரிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment