20 May 2009

திருகோணமலை, பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வன்னி நோயாளர்கள் 453 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்து திருகோணமலை பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் 453 பேர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள்னர்.இவர்களில் அதிகமானோர் பாரியளவில்; காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இங்குள்ள வைத்தியசாலையில் இடப்பற்றாக் குறை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த மேலும் 46 பேர் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட ஆங்கில பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதுவரை வைத்தியசாலையில் குணமடைந்த சுமார் 200 வன்னி நோயாளர்கள் வரை ஆங்கில பயிற்சி கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டுள்ள்மை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment