14 May 2009

இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பொக்குளிப்பான்

வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 9842 பேர் பொக்குளிப்பான் நோய்க்குள்ளாகியிருப்பதாக மனிதாபிமான சேவைகளுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. நலன்புரி நிலையங்களில் மக்கள் நெருக்கமாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதனால் இந்த நோய் பெரும் எண்ணிக்கையானவர்களுக்குப் பீடித்துள்ளதாகத் தெரிகிறது. புள்ளிவிபரத் தகவல்களின்படி 1,97,751 பேர் இடம்பெயர்ந்து வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment