இந்தியத் தூதுவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவ் சங்கர்மேனன் ஆகிய இருவரும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடினர். இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை நடத்தியதாகவும், மோதல்களினால் இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை அவர்கள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா அனுப்பி வைக்கவுள்ள ரூ. 500 கோடி நிவாரண பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிப்பது குறித்தும், இந்திய அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிரபாகரன் இறப்பு குறித்த மரணச் சான்றிதழ் தேவைப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment