13ஆவது திருத்தச் சட்டம் - அரசின் நிலைப்பாடு பற்றி ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்- ஜே.வி.பி.
13ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? அல்லது கைவிடுமா? என்பது தொடர்பாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது. இதை ஊடகவியலாளார் மாநாட்டில் தெரிவித்த ரில்வின் சில்வா 13ஆவது திருத்தம் அரசின் கொள்கையென சில அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர். அதேவேளை அரசில் பங்காளிகளாகவுள்ளோர் கடுமையாக எதிர்க்கின்றனர். இவ்வாறு அரசாங்கம் எந்த விடயத்திலும் நிலையான கொள்கையில்லாது தடுமாறுகிறது. அரசியலமைப்பே இந்நாட்டின் பிரதான சட்டமென்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளது. அதேவேளை இத்திருத்தம் சட்டபூர்;வமாக நியாயமானதாக நிறைவேற்றப்படவில்லை. பலாத்காரமாக திணிக்கப்பட்டது. எனவே இதனை சட்டபூர்வமானதென ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு புலிகள் இயக்கம் இருந்தபோது இவ் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.இன்று புலிகள் இல்லை. எனவே இது எவ்வாறு சாத்தியப்படும். எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தொழித்துள்ளனர். இதன் மூலம் அவர்களது கடமையை நாட்டுக்கு செய்துள்ளனர். ஆனால் அரசாங்கம் இந்தியாவின் தேவைக்காக அதிகாரத்தை பரவலாக்க முயற்சிப்பதோடு மீண்டுமொரு பிரிவினைக்கு வித்திடுகின்றது என்றார்.
சர்வகட்சி மாநாடு நிபுணர்குழு இவைகள் அரச சார்பற்ற நிறுவனமான பர்கோப் நிறுவனம் வழங்கிய யோசனைகளையே முன்வைத்துள்ளது. எனவே இவ் யோசனைகளை குப்பை கூடையில் போட வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் குழுவை அழைத்து தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பிலான விவாதத்தை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக வேண்டும்.
No comments:
Post a Comment