24 June 2009

அரசியலமைப்புச் சபையை உடனடியாக நியமிக்க வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு சபையை உடனடியாக நியமிக்க வேண்டுமென ஐ.தே.க யும் ஜே.வி.பி.யும் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகிய இருவர் பற்றியும் எழுப்பியிருந்த இரு கேள்விகளுக்கும் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன பதிலளித்த போதே அரசியலமைப்பு சபை பற்றி சர்ச்சை எழுந்தது. இதேவேளை, தேர்தல் ஆணையாளர் தொடர்பாக எழுப்பப்பட்டிருந்த கேள்வியின் போது அரசியலமைப்பு சபை நியமிக்கப்படாமல் இருப்பதினாலேயே தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெற வேண்டிய வயதைத் தாண்டியும் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். எனினும், தேர்தல் ஆணையாளர் பதவிக்கு அடுத்து ஒருவர் நியமிக்கப்படும் வரை தற்போது இருப்பவருக்கு அப்பதவியில் இருந்து ஓய்வு பெற முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் எனவே, அடுத்து ஒருவர் நியமிக்கப்படும் வரை தற்போதைய தேர்தல் ஆணையாளர் அப்பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.

No comments:

Post a Comment