24 June 2009

ஐ.நா. ஊழியர் கைது பிரான்ஸ் கடும் கண்டனம்

இலங்கையில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் இரு ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா. பாதுகாப்புச்சபையின் உறுப்பினரான பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் படையினர் கடந்த மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்ததன் பின்னர் இராணுவ முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உதவுவது தொடர்பாகவும் மக்களை நீண்ட காலம் தடுத்து வைத்திராது அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்குமாறு ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில், ஐ.நா. முகவர்களை எவ்வித தடைகளுமின்றி அவர்கள் பணியிலீடுபட அனுமதிக்க வேண்டுமெனவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment