வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள் குடியேற்றம்
வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை, பூவரசங்குளம் உட்பட 25 கிராமங்களில் வவுனியா நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 800 குடும்பங்களை முதற் தடவையாக மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான இறுதிக்கட்ட அறிக்கை 03-07-2009ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment