யாழ் பருத்தித்துறையில் யுவதி சடலமாக மீட்பு
யாழ். பருத்தித்துறை கந்த உடையார் வீதியில் தனிமையில் வாழ்ந்த இளம் பெண் தெய்வேந்திரம் அபிராமி (33) மர்மமான முறையில் மரணடைந்த நிலையில் வீட்டு படுக்கையறையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் 28-06-2009 நண்பகல் இப் பெண்ணின் வீட்டுக் கதவு வழமைக்கு மாறாக பூட்டப்பட்டு இருப்பதை அவதானித்து வீட்டினுள் சென்று பார்த்த போது படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார்.
பெற்றோர்களை இழந்த நிலையில் கடந்த பல வருடங்களாக தனிமையில் இப் பெண் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளையின் தொண்டராகவும் அலுவலக லிகிதராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை நீதவான் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டதையடுத்து மரணம் அடைந்தவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் சடலத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார். இப் பெண்ணின் கழுத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதக் கூடிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
No comments:
Post a Comment