5000 சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 5000 சிறுவர்களிடையே போஷாக்கின்மை வீதம் அதிகரித்து காணப்படுவதாகவும் இச் சிறுவர்களுக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேகமான ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கு எதிரான சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி பி.பி.சி செய்திக்கு தெரிவித்துள்ளார்.மேலும் வடக்கிலே இடம்பெற்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட நிலையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 2,80,000 இற்கும் அதிகமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும்
No comments:
Post a Comment