12 June 2009

புல்மோட்டைக்கு இடம்பெயர்ந்தோர் பூஸா முகாமுக்கு மாற்றம்

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு வந்தவர்களில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் 21 பேர் காலி பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. இவர்கள் வன்னியில் இடம் பெற்ற கடும் சண்டையின் போது படகில் வந்தவர்களாவர்.புல்மோட்டையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பதவியா ஹெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் எட்டு யுவதிகளும் அடங்குகின்றனர். இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புல்மோட்டைக்கு வந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்கள் பதவியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment