மரணமடைந்த 62 பேரின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரியில்
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துவவுனியா முகாம்களில் தங்கியுள்ளவர்களில் கடந்தமாதம் 25ம் திகதியிலிருந்து இம் மாதம் 09ம் திகதி வரையில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரின் உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களையும், ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள். இச் சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களின் குடும்பத்தினர் வௌ;வேறு முகாம்களில் தங்கியிருப்பதால் இவர்களின் மரணம் குறித்து குடும்பங்களுக்குத் தெரியாதுள்ளது.
இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது.
No comments:
Post a Comment