யாழ். ரயில் நிலைய சுற்றுவட்டத்தில் தங்கியுள்ளோரை வெளியேற உத்தரவு
இடம்பெயர்ந்து யாழ். ரயில் நிலையத்திலும், அதன் சுற்று வட்டத்திலும், விடுதிகளிலும் தங்கி யுள்ளவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு யாழ். அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே ரயில் சேவையை ஆரம்பிக்கும் முகமாவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அங்கு தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் எவையும் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு உயர்பாதுகாப்பு வலயமாக வலிகாமம் வடக்கு பிரகடனப்படுத்தபட்ட பின்னர் அங்கு வாழ்ந்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான பல இடங்களில் குடியிருந்தனர்.இவர்கள் தற்காலிக கொட்டகைகளையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment