25 June 2009

வெல்லாவெளி பகுதியில் புலி உறுப்பினர் பலி

மட்டக்களப்பு வெல்லாவெளி கம்பியாறு பகுதியில் கடந்த 23-06-2009 மாலை பொலிஸாரால் கூட்டிச் செல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படும் சின்னக் கடாபி என அழைக்கப்படும் நல்லதம்பி யோகேந்திரன் (30)குண்டொன்று வெடித்ததில் கொல்லப்பட்டுள்ளார். வெல்லாவெளி கம்பியாறு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காண்பிப்பதற்கு இவரை பொலிஸார் கூட்டிச் சென்ற இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவருடன் சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த என்பவர் சிறு காயமடைந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் சடலம் பின்னர் களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

No comments:

Post a Comment